Wednesday 31 December 2014

2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறிவிப்பு.

Bharat Sanchar Nigam Limited
( A Govt. Of India Enterprise)
O/o Chief General Manager, Tamil Nadu Circle, Greams Road, Chennai-6. 
No: ERP/HCM-Payroll/2014-15/     Dated at Chennai-600 006, the 31-12-2014
To

The Internal Financial Advisor,
O/o the Principal General Manager/General Manager,
Bharat Sanchar Nigam Limited,
All SSAs of Tamil Nadu Circle.

  Sub:  Payment of GPF-Withdrawal, GPF-Advance and Festival Advance in January 2015 –reg
*********
                               As ESS Portal Go-live is in the month of January 2015, the applications for GPF/Festival Advance payment may be collected manually.  The details may be sent for GPF -Withdrawal, GPF-Advance and Festival Advance to this office in the excel format attached to this letter to email id: hcmfintncircle@gmail.com.  While sending the details for Festival Advance, the DDOs are advised to ensure that no balance is pending for the previous Festival Advance. Regarding GPF, the DDOs has to ensure the available balance of the employees with respect to GPF Balance in HRMS while sending the Application details.
                       The last date for receipt of the application is 05-01-2015.  No application will be entertained after the last date under any circumstances.
                                                                                                                         Sd . . . . . . . 
                                                  Dy. General Manager  (Employee Claims & Pay Bill)
O/o CGMT, BSNL, Tamil Nadu Circle,
                                                                                            Chennai – 600 006.   
அருமைத் தோழர்களே ! 2015 ஜனவரி முதல் GPF & Festival Advance பெறுவதற்கு அலுவலர்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான  கால அவகாசம் குறித்து தமிழ் மாநில நிர்வாகம்  மேற்கண்டவாறு  அறிவிப்புவெளியிட்டுள்ளது (CGMஅலுவலகத்திற்கு 05.01.2015 என்பதால் மதுரை GMஅலுவலத்திற்கு 02.01.2015தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்) இந்த வழிகாட்டுதலை நமது கிளைச் சங்கங்கள் கவனத்தில் கொண்டு தோழர்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறோம்.  --- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU. 

BSNL"சிம்" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) கடிதம்.

அருமைத் தோழர்களே! நமது மதுரைமாவட்டம் உள்ளிட்ட தமிழகம், முதற்கொண்டு பலமாநிலங்களில் BSNL "சிம்" பற்றாகுறையாக உள்ளது  குறித்து நமது BSNLEU சங்கம் சார்பாக நாம் புகார் தெரிவித்திருந்ததின் அடிப்படையில் நமது (BSNLEU-CHQ )மத்தியசங்கம் கார்பரேட்அலுவலகத்திற்குகடிதம்எழுதியுள்ளது.---விபரம்அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...


Tuesday 30 December 2014

2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .


டிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுதினம்.


செய்தி . . . துளிகள் . . .

அருமைத்தோழர்களே..! ஒருவழியாக நமது தமிழ் மாநிலத்தில் .ERP மூலம் நிரந்தர ஊழியர்களின் டிசம்பர்-2014 மாத சம்பளம் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது.ஊழியர்களுடைய 2014-டிசம்பர் மாத மொத்த சம்பளம்பிடித்தம் மற்றும் கையிருப்பு பணம் ஆகிய தகவல்கள் ஒவ்வொருவரின் அலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டுள்ளது.இதில் ஏதேனும் விடுதல் மற்றும் குளறுபடிகள் இருந்தால் தோழர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்சம்பள பட்டுவாடா ஓரிரு நாட்களில்  நடந்தேறும்.
ஆனால்  இம்மாத GPF பட்டுவாடா..சென்ற மாத ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடாஆகியவை இன்னும் தீர்க்கப் படவில்லை.ஒரு சில மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாதச்சம்பளம்   வழங்கப் பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி அடையாள எண் ஆகியவற்றில் நிகழும் குளறுபடிகளால் பில் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகின்றதுஆரம்பக்கட்டம் என்பதால் இத்தகைய   குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் வரும் புத்தாண்டில் இவையெல்லாம் சரிசெய்யப்படும் என்றும்..நிர்வாகத்தால் நம்பிக்கை தரப்படுகிறது குறிப்பாக நமது மதுரை மாவட்டத்தில் டிசம்பர் -2014லில் இன்க்ரிமென்ட் பெறக்கூடியவர்கள் சுமார் 147 பேருக்கு விடுதல் உள்ளதை கண்டறிந்து நமது மாநில சங்கத்தின் கவனத்திற்கும், நிர்வாகத்தின் கவனத்திற்கும் மாவட்ட சங்கம் கொண்டு சென்றுள்ளது.....
டிலாய்ட் கமிட்டியின் பரிந்துரைகளைக் கணக்கில் கொண்டு BSNL நிர்வாகம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவை என்ன என்பது  குறித்து ஒரு மாடல்  கணக்கை தொழிற்சங்கங்களுக்கு   BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது.
CGM,PGM,GM,DGM,DE,SDE,AO,JTO,JAOபோன்ற கேடர்களில் தற்போது 45852 அதிகாரிகள் உள்ளனராம். தேவைப்படும் அதிகாரிகள் 55780 பேர் என நிர்வாகம் கூறியுள்ளது.
எஞ்ஜினியரிங் பிரிவு
CGM பதவியில் 44 பேர்தான் உள்ளனர். 80 பேர் தேவையாம்.
GM பதவியில் 484 பேர்தான் உள்ளனர். 715 பேர் தேவையாம்.
DGM பதவியில் 1074 பேர்தான் உள்ளனர்.1868 பேர் தேவையாம்.
DE பதவியில் 3642 பேர்தான் உள்ளனர்.7588 பேர் தேவையாம்.
SDE/JTO பதவியில் 40608 பேர்தான் உள்ளனர். 45529 பேர் தேவையாம்.
கட்டிடக்கலை பராமரிப்பிற்கு 157 அதிகாரிகள் உள்ளனராம் 163 பேர் தேவையாம்
சிவில் பகுதிக்கு 1797 அதிகாரிகள் உள்ளனராம். 1817 பேர் தேவையாம்.
எலக்ட்ரிகல் பகுதிக்கு 1157 அதிகாரிகள் உள்ளனராம். 1167 பேர் தேவையாம்.
கணக்கியல் பிரிவு
CGM/PGM பதவியில் பேர்தான் உள்ளனர்.8 பேர் தேவையாம்.
GM பதவியில் 29 பேர்தான் உள்ளனர். 59பேர் தேவையாம்.
DGM பதவியில் 278 பேர்தான் உள்ளனர்.402 பேர் தேவையாம்.
CAO பதவியில் 453 பேர்தான் உள்ளனர்.920 பேர் தேவையாம்.
AO/JAO பதவியில் 5987 பேர்தான் உள்ளனர். 5514 பேர் தேவையாம்.
ஊழியர்கள்
TTA  கேடரில் 19691 பேர் உள்ளனர். தேவை 24000.
SRTOA  கேடரில் 30000 பேர் உள்ளனர். தேவை 30000.
TM கேடரில் 87487 பேர் உள்ளனர். RMகேடரில் 29541 பேர் உள்ளனர். 
TM மற்றும்RM கேடர்களில்உள்ளோர் மொத்தம் 1,17,025. தேவை 72000.
ஊழியர்கள் 1,98,223 உள்ளனர்.தேவை 1,27,500

இலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்!

ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி இலவசமாக பேசி வந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு!
ஆமாங்க.. இனி அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
இந்தியாவில் தானியார்  நிறுவனங்களில் ஒன்றான   பாரதி ஏர்டெல், இலவசமாக வழங்கி வந்த ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.---விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

ராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...

அனைத்து சங்க கூட்டுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் .சவுந்தரராசன் கூறியது வருமாறு:போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 2வது நாளாக வெற்றிகரமாக நடக்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. ஆளும் கட்சியினர் வெளியாட்கள், நேர்காணல் முடித்தவர்கள், பயிற்சி பெறாதவர்கள் போன்றோரை வைத்து மிகக் குறைந்த பேருந்துகளை இயக்குகிறது. ஒரு வழித்தட பேருந்தை 8 வழித்தடத்தில் ஓடச்செய்து, பேருந்துகள் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். பயிற்சி பெறாத தொழிலாளர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது அபாயகரமானது.அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிமனைகள் முன்பும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபடுவார்கள். 2001ம் ஆண்டு போராட்டத்தின் போது 22ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனை விஞ்சும் வகையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் கைதாகி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளோம்.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்காமல், தொழிலாளர்கள் மீது அரசு எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை 11 சங்கங்களும் கூட்டாக எதிர் கொள்வோம். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தி இருக்கிறார்களா? என்றெல்லாம் பரிசோதனை செய்திருக்கிறார்கள். என்னென்ன பொய் வழக்குகள் பதிவு செய்யப் போகிறார்கள் என்பது தெரியாது. எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.தமிழகத்தின் பிரதானமான மையப்படுத்தப்பட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றன. இப்போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்களை சிறுமைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன.தொழிற்சங்க முன்னணி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய ஏதுவாக, கிளை மேலாளர்களிடம் இருந்து முகவரி பட்டியலை காவல்துறையினர் பெற்றுச் சென்றுள்ளனர்.தந்தை இல்லையென்றால் மகனையோ அல்லது வீட்டில் உள்ள ஒருவரையோ கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.ராணுவ ஆட்சியில் நடப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெறும். அரசு, அமைச்சரின் அலட்சியம் காரணமாகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Monday 29 December 2014

தேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.

அருமைத் தோழர்களே ! இந்திய நாட்டின் அதிமுக்கிய பொதுத்துறைகளில் ஒன்றான இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்த வகைசெய்யும் படியான  மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக மதுரை LICஅலுவலகத்தில்  100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிட்டத்தட்ட பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆவேச ஆர்ப்பாட்டம்,இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்த வகைசெய்யும் படியான  மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை உடனடியாக கைவிடு என்ற கோரிக்கையோடு, மிக  மிக சக்திமிக்க ஆர்பாட்டம் நடைபெற்றது .

ஆர்பாட்டத்திற்கு AIIEA சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர். தண்டபாணி அவர்கள் தலைமை தங்கினார். இன்சூரன்ஸ் பகுதியில் உள்ள முகவர்கள் சங்கம், டெவலப்மென்ட் அதிகாரிகள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் மத்திய அரசின் தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக கண்டன குரல் வலுவாக எழுப்பப்பட்டது.
போராடும் இன்சூரன்ஸ் AIIEAஊழியர்களுக்கு ஆதரவாக, திரளாக அவர்களது  ஆர்பாட்ட பங்கேற்பில் கலந்து கொள்ளுமாறு நமது BSNLEU மத்திய, மாநில சங்கங்களின் அறைகூவலை ஏற்று நமது BSNLEU மாவட்ட சங்கம் அனைத்து கிளைகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.அதனடிப்படையில் நமதுBSNLEU  பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட (16 பெண்கள் உட்பட) தோழர்கள் கலந்துகொண்டு தோழமை பூர்வமான ஆதரவைBSNLEU சார்பாக  நல்கினோம். நமது BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன்AIIEA போராட்டத்திற்கு ஆதரவாக வாழ்த்துரை வழங்கினார்.

பணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு ...

அன்பிற்கினியவர்களே ! 2014 இவ் வருடத்தின் இறுதி மாதமான டிசம்பரில்  பணி நிறைவு செய்யும் 10 பேரையும்  நமது BSNLEU பாராட்டுகிறது  ...
1.  A. அருளம்மாள் ,TM-EMM
2.  S. பாலு , STS-TMM
3.  S.T. கோபாலகிருஷ்ணன், TM-PLN 
4.  V. செல்வநாதன் , TM-TKM
5.  M. நடராஜன் ,STS-GM(O)
6.  S. குழந்தை மேரி, TM-CSC 
7.  S. ஜாபர் செரிப், TM-TKM 
8.  V. தங்கராஜ் , TM-DDG
9.  S. வேலுச்சாமி, AGM-CSC
10.R. வேணு, STS-DDG 
அனைவரின் பனி ஓய்வு காலம் எல்லா வகையுலும் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

தூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.

அருமைத்தோழர்களே !நமது BSNLEU தூத்துக்குடி மாவட்ட சங்கத்தின் நியாமான கோரிக்கை வெற்றி!
பிரதான கோரிக்கையான முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற இருந்த மாநில செயலரின் உண்ணாவிரதபோராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்டகளம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும், பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள் கூறி மாநிலசங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது....விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

மதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்கம்

அன்பிற்கினியவர்களே ! கடந்த 19.12.14 அன்று நடைபெற்ற மதுரை மாவட்ட லோகல் கவுன்சில் கூட்டத்தில், மதுரை மாவட்டவளச்சியை உயர்த்த அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் அமர்த்தி முழுமையான திட்டமிடல் தேவையென்று நாம் முன் வைத்த ஆலோசனை அடிப்படையில், எங்கெங்கு கேபிள், டிராப்வயர் போன்ற பொருட்கள் தேவை யென்பது குறித்த கூட்டத்தை 27.12.14 அன்று பொதுமேலாளரல் நடத்தப்பட்டது. அதனுடைய முடிவின் அடிப்படையில் ஒரு பகுதியாக மதுரை பீபி குளப்பகுதி உழவர் சந்தையில், மதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்கம் சார்பாக "மேளா" நடத்தப் பட்டகாட்சி. 

மோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறுப்பு...

தனக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்புகள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வைத்த கோரிக்கையை ஏற்க மெஹ்சானா காவல்துறை மறுத்து விட்டது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்ட உள்ளூர் புலன் ஆய்வுப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் அவருடைய கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று அது கூறியுள்ளது. இதுகுறித்து அவருக்கு எழுத்துப் பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று மெஹ்சானா மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் ஜே. ஆர். மோத்தாலியா தெரிவித்துள்ளார்.நவம்பர் 24 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை மனுவில் யசோதா பென்அவருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அரசு பிறப்பித்த உண்மையான உத்தரவின் நகல் உள்ளிட்ட, அரசு நடைமுறைப்படி அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த பல்வேறு ஆவணங்களை தனக்கு அளிக்கும்படி கேட்டிருந்தார். பிரதமரின் மனைவிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அரசியல் சட்டம் கூறும் விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் பதில் அளிக்கும்படி அவர் கேட்டிருந்தார். மேலும் மரபு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறும், அதற்குள் அடங்கியிருப்பவை என்னென்னவென்றும், அந்த மரபு நடைமுறைப்படி தனக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். நடைமுறையில் உள்ள பாதுகாப்பு அமைப்பை மட்டும் அவர்வினவியுள்ளார். பாதுகாக்கப்பட வேண்டியவர் பொது பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், பாதுகாப்பு படையினர் அரசுக்கார்களிலும், வாகனங்களிலும் தொடர்வது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய சொந்த மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்த அவர் தனது பாதுகாப்பு படை வீரர்கள் குறித்தும் தனது மனுவில் அச்சம்தெரிவித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாதுகாப்பு வீரரும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவை தன்னிடம் அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் ஆசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சகோதரர் அசோக் மோடியுடன் மெஹ்சானா மாவட்டத்தின் ஊஞ்சா நகரில் வசித்துவருகிறார். மெஹ்சானா காவல்துறை ஆயுதமேந்திய காவலர்களுடன் பத்து காவலர்களை அவருடைய பாதுகாப்புக்கு நியமித்துள்ளது. அவர்கள் இரண்டு ஷிப்ட்டுகளில் பணி யாற்றி வருகின்றனர்.