Monday 22 December 2014

பாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்அறைகூவல்...

பாக்ஸ்கான் தொழிற்சாலையை மூடக்கூடாது என்று வலியுறுத்தி அந்த ஆலையின் தொழிலாளர்கள் CITUமாநிலத் தலைவர் .சவுந்தரராசன் தலைமையில் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நோக்கியாவைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் ஆலையும் டிச.24 முதல் மூடப்படும் என்று அந்தஆலையின் நிர்வாகம் மாவட்டதொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்தது.
கடந்த 9 ஆண்டுகளாக 8000 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிவந்த இந்நிறுவனம் குறைந்த விலையில் நிலம், மலிவு விலையில் தடையற்ற மின்சாரம், செல்போன் உற்பத்தி சாதனங்களுக்கு வரிச்சலுகை உள்பட அரசின் சலுகையை பெற்று மலை மலையாய் லாபத்தை ஈட்டிவிட்டு வரிச்சலுகை முடிந்தவுடன் நோக்கியாவை காரணம் காட்டி இந்தியாவை விட்டு ஓடப்பார்க்கிறது.தொழிலாளர்களின் போராட்டத்தையடுத்து தொழிலாளர் நலத்துறை யினர் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினர். ஆனால் அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே ஆலையை மூட நிர்வாகம் அனுமதி கேட்டபோது தொழிலாளர் நலத்துறை அனுமதிக்கவில்லை. அதையும்மீறி திங்களன்று முதல் பணிக்கு வரவேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு பாக்ஸ்கான் நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கிடையாது. ஆனால் சம்பளம் மட்டும்வழங்கப்படும் என்றும் அறிவித் திருந்தது. இதைக்கண்டு கொதிப் படைந்த தொழிலாளர்கள், பாக்ஸ்கான் தொழிலாளர் சங்கம் (CITU )சார்பில் தொடர் போராட்டத்தை துவக்கியுள் ளனர்.திங்களன்று (டிச22) CITUசார்பில் அதன் மாநிலத்தலைவர் . சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு மீண்டும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த் தைக்கு ஏற்பாடு செய்தனர்.அந்தப்பேச்சுவார்த்தையில் CITU சார்பில் மாநிலத்தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், மாநில நிர்வாகிகள் மாலதிசிட்டிபாபு, அப்புனு, மாவட்டத்தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் முத்துக்குமார் பாக்ஸ்கான் தொழிற்சங்க நிர்வாகி ரஜினி, தொமுச நிர்வாகி எழிலரசன் காவல் துறை சார்பில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சண்முகம், திருப்பெரும்புதூர் கண்காணிப்பாளர் கண்ணன், நிர்வாகத்தின் சார்பில் வேல்முருகன், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தகூட்டத்தில் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால்நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்டவர்கள் ஆலையை தொடர்ந்து நடத்த முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லைஎன்று தெரிவித்தனர்.
இதனால்யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ அவர்களை வரும் செவ்வாயன்று(டிச.23) அழைத்துப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.இதுகுறித்து .சவுந்தரராசன் கூறுகையில் ஆலையை தொடர்ந்து நடத்திட வேண்டும், தொழிலாளர்களுக்கு பேருந்துகளை தொடர்ந்து இயக்கிட வேண்டும் உணவகத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்றார்.இக்கூட்டத்தில் அரசின்சார்பில் தொடர்ந்து தொழிற்சாலையை நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நிர்வாகத்தின் சார்பிலும் கையொப்பமிட்டுள்ளனர். செவ்வாயன்று நடைபெறும் கூட்டத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கவில்லை என்றால் பேச்சுவார்த்தை நடைபெறும் டிசம்பர் 23ம்தேதி அன்றே அறிவித்தது போல் ஆலை நுழைவுப் போராட் டம் நடத்தப் படும் என்றும் அவர்கூறினார்.

No comments: