Saturday 20 December 2014

மௌனச் சகுனிகள் . . .

தாய்மொழி தமிழ் தெரியும்.
ஆங்கிலமும் கூட கற்றுக்கொண்டோம்.
கார்ப்பரேட் முதலாளிகள்
எந்த மொழியில் பேசினாலும்
வார்த்தைகளுக்கான பொருள்
புரியவே இல்லைசுரண்டலைப் போல்.
 மனிதநேயம் இருப்பதால்தான்
  விருப்ப ஓய்வாம்!உருப்போட்ட
வார்த்தைகளில்ரத்த வாடை.
15 வயது இளம் பெண்ணை
20ஆவது திருமணம்
செய்து கொள்ளும்காமுகனுக்கும்..
19 வயது இளைஞர்களை
வேலைக்கு அமர்த்தி
25 வயதில்தூக்கியெறியும்
முதலாளித்துவத்திற்கும்என்ன வித்தியாசம்?
முன்னது காமவெறி..பின்னது லாபவெறி..
நேற்று நோக்கியா
இன்று ஃபாக்ஸ்கான்..நாளை…?
ராஜராஜனின் ஆயிரம் ஆண்டு
பிறந்த நாள் கொண்டாட்டத்தின்
வாள்(ய்) வீச்சு ஆட்சியாளர்கள்...…
கார்ப்பரேட் ஷூக்களின் முன்மண்டியிட்டு
மௌனம் சாதிக்கிறார்கள்
பாண்டவர் ஐவருக்காகமகாபாரதப் போர்
சுற்றம் பார்க்காதே!கிருஷ்ணனின் கீதா உபதேசம்.
பல்லாயிரம் இளம் தொழிலாளர்களுக்குஎன்ன உபதேசம்?
விருப்ப ஓய்வா?அப்படியானால்..
ஆட்சியாளர்களேநீங்கள்..கார்ப்பரேட்
துரியோதனன்களுக்குசகுனியல்லவா?...
தொழிலாளரின் மானம் காக்கஎந்த கிருஷ்ணனும் வரப்போவதில்லை
போராட்டம்... போராட்டம் தவிர...                               ... நன்றி தீக்கதிர் 

No comments: