Tuesday 16 December 2014

15.12.14 " SAVE BSNL"-தேசபக்த - கையெழுத்து துவக்கம் ...

அன்பிற்கினியவர்களே ! திண்டுக்கல்லில் 15.12.14 " SAVE BSNL" என்ற -தேசபக்த கோஷத்தோடு மரியாதைக் குரிய திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர். கே.பாலபாரதி MLAஅவர்கள் - மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை மிக எழுச்சியுடன் துவக்கிவைத்தார்.....
திண்டுக்கல் கமர்சியல் அலுவலகத்தில் FORUMசார்பாக  நடைபெற்ற"SAVE BSNL"கையெழுத்து துவக்க விழாவிற்கு தலைமையை முன்மொழிந்து,BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர். .ஜான் போர்ஜியா உரைநிகழ்த்தினர். NFTE சார்பாக தோழர்.எஸ்.அருளானந்தம் தலைமை உரை நிகழ்த்தினார்.திருமதி.ரஞ்சிதம், கோட்டப்பொறியாளர் முன்னிலை வகுத்து எதார்த்த உரையாற் றினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்றுBSNLEU கிளைச் செயலர் தோழர்.ஜே.ஜோதிநாதன் உரைநிகழ்த்தினார்.அதன்பின் தோழர்.சந்திர குமார் SNEA, வாழ்த்துரை வழங்கினார். AIIEA சங்கத்தின் பொறுப்பாளரும், திண்டுக்கல் நகர தொழிற்சங்க செயலாளருமான தோழர்.S.A.T. வாஞ்சி நாதன், இன்சுரன்ஸ் ஊழியர்களின் அனுபவங்களை நினைவு கூர்ந்து வாழ்த்துரை வழங்கினார்.கூட்டத்தில் 7 பெண்கள் உட்பட 100க்கனக்கானோர் கலந்து கொண்டனர்.
முத்தாய்ப்பாக மக்கள் பிரதிநிதி தோழர்.கே.பாலபாரதி, MLAஅவர்கள், BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் நடத்தக் கூடிய "SAVE BSNL"கையெழுத்து துவக்க விழாவிற்கு பாராட்டுக்களை சொல்லி, இந்த BSNL FORUM நடத்தும் தேச பக்த போராட்டம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் வெற்றிபெற வாழ்த்துக்களை கூறியதுடன் , இந்திய நாட்டின் பொதுத்துறைகளில் ஒன்றான BSNLகாக்கப்படவேண்டும் என்றும், அவ்வெற்றிக்கு தானும், தான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி எப்போதும் போல் தொடர்ந்து பாடுபடும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து . முதல் கையெழுத்து இட்டு துவக்கிவைத்து எழுச்சி உரை நிகழ்த்தினார். 
அதன்பின், மதுரை தொலை தொடர்பு மாவட்ட கன்வீனர் தோழர்.எஸ். சூரியன், கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கையை விளக்கி பேசும் போது, இந்திய நாடு முழுவதும் கடந்த 1.12.14 அன்று அதாவது இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளன்று ஆர்பாட்டத்துடன் துவக்கப்பட்ட இயக்கம் தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே மக்கள் பிரதிநிதியை வைத்து மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கத்தை துவக்கிய முதல் மாவட்டம் என்ற பெருமையை மதுரை தொலை தொடர்பு மாவட்டம் பெறுகிறது என்பதை சொல்லி, இன்று 15.12.14 சுதந்திர போராட்ட வீரரரும், CITUசங்க ஸ்தாபகரில் ஒருவருமான தோழர்.பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு நாளில் திண்டுக்கல்லில் கையெழுத்து இயக்கம் துவங்குவது சாலசிறந்ததாகும்என்ற பதிவை செய்து, தொடர்ந்து வர இருக்கின்ற இயக்கங்களை BSNL நிறுவனத்தில் உள்ள  அனைவரும் ஒற்றுமையுடன், சக்தியாக நடத்திட வேண்டுமென்ற வேண்டுகோளுடன் உரையாற்றினார்.
இறுதியாக, திண்டுக்கல்லில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கையெழுத்துக்களை திண்டுக்கலில் மக்கள் மத்தியில் பெறுவோம் என்ற சூளுரையோடு, வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி TEPU சங்கத்தின் பொறுப்பாளர் தோழர். மதன முனியப்பன் உரைநிகழ்த்தி கூட்டத்தை நிறைவு செய்தார்.--என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எழுச்சி தொடரட்டும்
கோரிக்கைகள் வெல்லட்டும்

Unknown said...

எந்த நோக்கத்தோடு இயக்கம் அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும்வகையில் சிறப்பாக நடத்திவரும் மதுரை மாவட்டத்தோழர்களுக்கு, குறிப்பாக மதுரை மாவட்டச் சங்கத்திற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
சி. பழனிச்சாமி , பாரதி புத்தகாலயம்,
நாகர்கோவில்