
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, தனது அமைச்சகம் 25ம் தேதியை நல்ல நிர்வாகத்திற்கான நாளாக கடைப்பிடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அன்றைய நாளில்அமைப்பு ரீதியான மற்றும்முறைசாரா தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த இருக்கிறாராம். மத்திய அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலா துறையின் இணை அமைச்சர் மகேஷ் சர்மா வரும் 25ம் தேதியன்று புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாக கூறியுள்ளார். மத்திய அரசின் இளைஞர் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வரும் 25ம் தேதியன்று நேரு யுவகேந்திர திட்டத்தின் கீழ் 270000 இளைஞர் கிளப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் 25ம் தேதி மாரத்தான் போட்டி, ரத்ததானமுகாம், கண்சிகிச்சை முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகளில் M.P., MLAக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அமைச்சர்கள், M.P.க்கள், MLAக்கள் கிறிஸ்துமஸ் தினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விடுமுறையில் பணிக்கு வரவேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை
இருட்டடிப்பு செய்யும் இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள மனிதஉரிமை அமைப்புகள், மதச்சார்பின்மை அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.
No comments:
Post a Comment