Monday 22 December 2014

பொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்கள், காப்பீட்டு ஊழியர் சங்க மாநாட்டில் உ.வாசுகி வேண்டுகோள்...

பொதுத்துறையை பாதுகாக்க போராடும் இடதுசாரிகளை பலப்படுத்துங்கள் என்று காப்பீட்டு ஊழியர்களிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் அகிலஇந்திய துணைத்தலைவர் .வாசுகி வேண்டுகோள் விடுத்தார்.காப்பீட்டுக்கழக ஊழியர்சங்கத்தின் (சென்னைக் கோட்டம்-2) 21வது மாநாடுபுரசைவாக்கத்தில் சனிக்கிழமையன்று (டிச.20) தொடங்கியது. மாநாட்டைதொடங்கி வைத்து .வாசுகிபேசியது வருமாறு: உள்ளம் தோறும் மோடி,இல்லம் தோறும் தாமரை என்று முழங்கிய பாஜக ஆட்சியில், உள்ளம் தோறும் வேதனை, இல்லம் தோறும் சோதனை என்றநிலை உருவாகி உள்ளது. சமஸ்கிருத கல்வி, குருஉச்சவ் என RSSஅஜெண்டாக்கள் திணிக் கப்படுகிறது.சமையல் எரிவாயு, உரமானியம் வெட்டு, ஜனநாயகஉரிமை மறுப்பு, முதலாளிகளுக்கு சலுகை எனமக்கள் விரோத பாதையில் BJP செல்கிறது. எதிர்கட்சியாக எதிர்த்த திட்டங்களை ஆளுங்கட்சியானதும் ஆதரிக்கிறது.உயிர் காக்கும் மருந்துகளின் விலையை ஆயிரம் மடங்கு உயர்த்தி விட்டு, BJP வளர்ச்சியை பற்றி பேசுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மக்கள் மத்தியில் கொதிநிலையை உருவாக்கி வருகிறது.கருப்புப் பணத்தை மீட்கபோதிய முயற்சி எடுக்காமல், பாஜக அரசு வகுப்புவாத அரசியலை நடத்துகிறது. புராணத்திற்கும் வரலாறுக்கும் உள்ள இடை வெளியை BJP அரசு திருத்த முயற்சிக்கிறது. காந்தியை கொன்ற கோட்சேக்குசிலை வைக்க முயற்சிக்கிறது. இன்சூரன்ஸ் துறையை பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு இடதுசாரிகளை வலுப்படுத்துங்கள். இவ்வாறு வாசுகி பேசினார்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பொதுத்துறைகள் காப்பாற்றப்பட வேண்டும்
இயக்கம் வலுப்பெறட்டும்