பாகிஸ்தானின் பெஷாவரில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளின் உடல்கள்புதனன்று மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டன.தங்களதுஅன்புக்குழந்தைகளின்உடல்களைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும்.கதறி அழுதனர்
பாகிஸ்தான் ராணுவப் பள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 132 குழந்தை களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத் தில் உள்ள பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.அப்பள்ளியில் செவ்வாயன்று காலை 10.30 மணி அளவில் புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த 6 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இத்தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியானார்கள். ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. “பாகிஸ்தானுக்கு இந்தியா துணை நிற்கும். பாகிஸ்தான் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இத்தருணத்தில் அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதனன்று இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் 2 நிமிடம் மவுன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் அஞ்சலி
பாகிஸ்தான் குழந்தைகள் உள்பட 141 பேருக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
“பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் 132 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் கொடிய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிர்ச்சியையும் சொல்லொண்ணாத் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலும் 120 குழந்தைகள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.மனிதாபிமானமின்றி, மிகவும் இழிந்த முறையில் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பினர் நடத்தியுள்ள இந்த அட்டூழியத்திற்கு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் பொறுக்கவியலாத மனவேதனையில் CPI(M) கட்சியும் பங்கேற்கிறது. அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.பயங்கரவாத வன்முறையைத் துணிவுடன் எதிர்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். “தீவிரவாத-பயங்கரவாதக் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அரசுகளும் ஒத்துழைத்திட வேண்டும்” 17.12.14 அன்று சென்னையில் நடைபெற்ற, BSNLஊழியர் சங்க தமிழ் மாநில செயற்குழு தனது அஞ்சலியை செலுத்தியது...
1 comment:
குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
இக்கோழைத்தனமாக செயலைக் கண்டிப்போம்
Post a Comment