Sunday 7 December 2014

F.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்? - சப்பை கட்டு...

FCI.,யின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரிசி மாயம்? அரவை மில்லுக்கு கொடுக்கப்பட்டதாக சப்பை கட்டு, இந்திய உணவு கழகமான FCI.,க்கு சொந்தமான, 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி மாயமாகி யுள்ளதாக திடுக்கிடும்தகவல்வெளியாகியுள்ளது.
கொள்முதல்:
நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளிடமிருந்து, நெல், கோதுமை போன்றவற்றை நியாயமான விலையில் கொள்முதல் செய்வது போன்ற பணிகளை, இந்திய உணவு கழகம் செய்து வருகிறது. இந்திய உணவு கழகத்தால், கொள்முதல் செய்யப்படும் நெல், கோதுமை போன்றவற்றை சேமித்து வைக்க, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போவதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், உணவு கழகத்திற்கு, மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து, FCI., நெல் கொள்முதல் செய்கிறது. இவற்றை, அப்படியே பொது வினியோக திட்டத்துக்கு வழங்க முடியாது. அரவை மில்களில் நெல்லை கொடுத்து, அரிசிஆகவாங்குவதுவழக்கம்.
திரும்பவில்லை:
சமீப காலமாக, இப்படி அரவை மில்களுக்கு கொடுத்த, 60 லட்சம் டன் நெல், இன்னும் அரிசியாக FCI., கிடங்குகளுக்கு திரும்பவில்லை என, புகார் கூறப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில், 38.2 லட்சம் டன்னும், இந்த நிதியாண்டில், 21.5 லட்சம் டன் நெல்லும் அரவை மில்களுக்கு கொடுக்கப்பட்டது. இவை என்ன ஆனது என்பது பற்றிய விவரம் மர்மமாக உள்ளது. பீகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில், FCI., சார்பில், அந்தந்த மாநில அரசுகளே, விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் கோதுமையை கொள்முதல் செய்கின்றன. இந்த மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட நெல் தான், மாயமாகிஉள்ளன.
சந்தேகம்:
இதுகுறித்து FCI., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த நான்கு மாநிலங்களிலுமே, உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் பணிகளில், அந்தந்த மாநில அரசுகள் தான் ஈடுபட்டுள்ளன. அரவை மில்களுக்கு சென்ற நெல்களை அரைப்பதற்கு சில மாதங்கள் தாமதமாகலாம். ஆனால், ஒரு ஆண்டுக்கு மேல் தாமதமாவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சம்பந்தபட்ட மாநில அரசுகள், இந்த நெல்லை கொள்முதல் செய்ததும், அவற்றை மில்களுக்கு அனுப்பியதும் உண்மை தானா என்றகேள்விகள்எழுகின்றன.இவ்வாறு,அவர்கூறினார்.
* கடந்த நிதியாண்டில், 6,318 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல்லும், இந்த நிதியாண்டில், 3,745 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல்லும் மாயமாகியுள்ளது.
*
குறைந்தபட்சம், 1.4 கோடி டன் கோதுமையை இருப்பு வைக்க வேண்டும். கடந்த அக்டோபரில்,
3
கோடி டன் கோதுமை, எப்.சி.., கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
*
குறைந்தபட்சம், 70 லட்சம் டன் அரிசி இருப்பு வைக்க வேண்டும். ஆனால், 2.3 கோடி டன் அரிசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
*
அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளதன் காரணமாகவே, ஏராளமான உணவு தானியங்கள் வீணாகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது
.

No comments: