வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வங்கிக் கடன் செலுத்தாதவர்களின் முழுபட்டியல் வெளியிடப்படும் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் வெங்கடாசலம் திருச்சியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.அனைத்திந்திய வங்கி ஊழியர்சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் திருச்சியில் நிருபர்களிடம் கூறிய தாவது:வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நவம்பர் 2012 முதல்நிலுவையில் உள்ளது. தொழிற் சங்கங்கள் கொடுத்த கோரிக்கைகள் 2 வருடங்களாக ஏற்கப்படவில்லை. உடனடியாக ஊதிய உயர்வு கோரி அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் பிறவங்கி சங்கங்கள் வரும் ஜனவரி 7ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், ஜனவரி 21 முதல் 24வரை 4நாட்கள் தொடர் வேலை நிறுத்தமும் மார்ச் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளன.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை எதிர்க்கின்றோம். இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 75லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களின் வைப்பு தொகை உள்ளது. வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிப்பதோடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகள் வங்கிகள் துவங்க அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் மக்களின் சேமிப்பு பணம் தனியார் முதலாளிகளின் வசம் சென்று வங்கிகள் திவாலாகும் அபாய நிலை ஏற்படவாய்ப்புள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை வங்கிகள் நிர்வாக சீர்கேடுகளின் காரணமாக திவாலாகி உள்ளது. வங்கிகளின் வாராக்கடன் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரிய முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாததே இதற்கு காரணம். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.கிங் பிஷர் விமான நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 7ஆயிரம் கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டியிருக்கிறது. அதன் நிறுவனர் மல்லையாவை வேண்டு மென்றே கடனை செலுத்தாதவர் என அறிவித்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் போது வங்கிக்கடன் திருப்பி செலுத்தாதோரின் முழுப்பட்டியலை வெளியிட இருக் கிறோம். வரும் பிப்ரவரி 2015 முதல் வங்கி சீர்திருத்தம் மற்றும் வாராக்கடன் தொடர்பாக அகில இந்திய அளவில் பிரச்சாரம் மற்றும்போராட்டம் மேற்கொள்ள முடிவு
செய்யப் பட்டுள்ளது.அதுமட்டு மல்லாமல் பொதுத்துறை வங்கி களை பலப்படுத்த மற்றும் வாராக்கடனை வசூல்செய்ய சரியான
நெறிமுறை மற்றும் வழிக்காட்டுதல் களைக்கோரி அகில இந்திய அளவில் வேலை நிறத்தமும் நடை பெற இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment