Monday 31 August 2015

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரைப்படங்களில் பதிவு செய்வோம் கம்பம் விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேச்சு...

தமுஎகச மற்றும் நிழல்கள் திரைப்பட சங்கம் சார்பில் கம்பம் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கலந்துகொண்டு பேசியதாவது:மனித மனங்கள் அடி ஆழத்தில் உள்ள அன்பை ,பரிசுத்தமான நேசத்தை, வலியை எந்தப் படம் சுரண்டி எடுக்கிறதோ அதுதான் உலக சினிமா.எந்த சினிமா மனிதனை தூங்க விடாமல் செய்கிறதோ அது உலக சினிமா.எனது படங்களில் மன்னர்களைப் பற்றி எடுக்கவில்லை. சாதாரண அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய வலிகளைத் தான் படமாக எடுத்துத்துள்ளேன். அவர்களின் வலிகளை பதிவு செய்ய ஆசைபடுகிறேன். வாழ்க்கையில் அடித்தட்டு மக்கள் படும் வேதனைகள், ஆயிரமாயிரம் சிக்கல் நிறைந்தவை. ஒரு திரைப்படம் ,அல்லது குறும்படம் மக்களிடம் மாற்றத்தை உருவாக்க வேண்டும். கிராமங்களில் வாழ்வியல் பற்றிய நல்ல கதைகள் கொட்டிக் கிடக்கின்றன .கலைஞர்கள் கிராமப்புறத்திலிருந்து வரவேண்டும்.ஹாலிவுட் படங்கள் சாகசங்களை மட்டுமே நம்புகின்றன.கடந்த 25 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் தமுஎகச கலை -இலக்கிய வளர்ச்சியை மக்கள் முன் நிறுத்திவருகிறது. நல்ல வாழ்க்கைத்தரம் உயர பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அறிவும் ரசனை வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதற்கான பணியை தமுஎகச தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர் தாமிராவிழாவில் பேசிய இயக்குனர் தாமிரா ,தான் இயக்கிய மெகர் என்னும் குறும்படம் பல இளைஞர்களின் மனதை மாற்றியிருக்கிறது .இக் குறும்படத்தை பல இடங்களில் தமுஎகச ,கலை இலக்கிய பெருமன்றமும் வெளியிட்டுள்ளது. வரதட்சணை தொடர்பாக இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.இயக்குனர் ரவிக்குமார் விழாவில் வாழ்த்துரை வழங்கியஇன்று நேற்று நாளைஇயக்குனர் ஆர்.ரவிகுமார் ,தமுஎகச கலை இரவு மேடைகளின் மூலம் பார்த்து ,ரசித்த நிகழ்வுகளே நான் இயக்குனர் ஆவதற்கு உந்து சக்தியாக விளங்கியது.குறும்படங்கள் மூலம் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனேன்.தமுஎகச தான் என்னை முழுமையாக செதுக்கியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.நிகழ்வுக்கு தமுஎகச திரை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அய்.தமிழ்மணி தலைமை வகித்தார்.வரவேற்புக் குழு தலைவரும் நடிகருமான ஜோ.மல்லூரி முன்னிலை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் வரவேற்று பேசினார்.நிகழ்வை வாழ்த்தி பேரா.அப்துல் சமது உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.எம்.சிவாஜி தொகுத்து வழங்கினார்.திரைப்பட இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணா, கிளை செயலாளர் அபுதாகீர் உள்ளிட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Sunday 30 August 2015

கார்ட்டூன் . . . கார்னர் . . .


செப்டம்பர்-2, வேலைநிறுத்தத்தை நோக்கி! . . .

நம்பினார் கெடுவதில்லைமீண்டும் ஒருமுறைபொய்த்துப் போனது.மன்மோகன் பாராட்டிய வார்த்தைகளில்மோடி உற்சாகம். முதலாளிகள் கொண்டாட்டம்.காட்சி மாறாத ஆட்சி மாற்றம்.சுதந்திர தின உரையில் அடிமைகளின் வார்த்தைகளாய்...நிலம் பறிப்பு... தொழிலாளர் சட்டங்கள் முடக்கம்.மேக் இன் இந்தியா கூடாரத்திற்குள்...பரங்கியரின் ஆதிக்கம்.நினைவில் வந்து போகும் வரலாறுஒடுக்கப்பட்டது சிப்பாய் புரட்சி..சிலமாதங்களில்..சவக்குழியில் முடிந்ததுகோட்டைகளின் கலகம்..தூக்கு மேடைகளில் முடிந்ததுபாளையக்காரர்களின் போர்….ஆனாலும் அடங்கவில்லை விடுதலை வேட்கைஆதிவாசிகளின் கலகம்... விவசாயிகள் ஏந்திய ஆயுதம்...தொழிலாளர்களின் கிளர்ச்சி... மாலுமிகளின் போர்...…
இளைஞர்களின் எழுச்சிஎங்கும்ஒரே முழக்கம் விடுதலை.அஸ்தமமானது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்போர்களில்லை இப்போது காலனியாதிக்கம் இல்லை. ஆனாலும் ஒப்படைக்கிறோம் நிலத்தைதாரைவார்க்கிறோம் தண்ணீரைபாதுகாப்பு, வங்கி, காப்பீடு, ரயில்வேஅனைத்தும் அந்நியர் கையில்அதன் பெயர் மேக் இன் இந்தியா...கேஸ் மான்யம் வேண்டாம்நீ சிறந்த குடிமகன்இடஒதுக்கீடு வேண்டாம்நீ இந்துத்துவாவின் தலைமகன்எதிர்த்து விட்டாலோநீ அன்னியன்.நவகாலனியாதிக்கத்திற்காகமோடியின் புதிய உற்பத்திகள்.வளர்ச்சியின் வரப்பிரசாதம்...விவசாயி தூக்குக் கயிறுடனும்...டீ விற்றவர் 10 லட்சம் ரூபாய் சட்டையுடனும்எல்லாம் அதானிகளின் செயல்நம்புங்கள் வளர்ச்சி... வளர்ச்சி...காந்தியும் இயேசுவும் சொன்னதாகஆசிரியர் சொன்னார்...ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு எனமாணவர் கேட்டார்...அடித்த பின் சவப்பெட்டியைக் காட்டினால் என்ன செய்ய?பொறுமையாய் சொன்னார்புதிய ஆசிரியர் போராடு என்று...நடந்து சென்ற விவசாயி சொன்னார் அதுதான் உன் வரலாறு என்று...தெருமுனையில் விளம்பரம் சொன்னதுதொழிற்சங்கம் வழிகாட்டுவதாகவெற்றிக்கான பயணம்வேலைநிறுத்தம் நோக்கி. . . 

செப்-30, கலைவாணர் N.S.கிருஷ்ணன் நினைவு நாள்...

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம்.
பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.
திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மறைந்தார்.

செப். 2 வேலைநிறுத்தம் உறுதியுடன் நடைபெறும் .10 தொழிற்சங்கங்கள் அறைகூவல்...

மோடி அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் உறுதியுடன் நடைபெறும் என INTUC அகில இந்தியத் தலைவர் G.சஞ்சீவி ரெட்டியும், CITU தலைவர் A.K..பத்மநாபனும் தெரிவித் துள்ளனர்.  இது தொடர்பாக புதுதில்லியில் நடைபெற்ற 10 தொழிற் சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகை யாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது :செப்டம்பர் 2 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெறுகிறது. இவ்வேலைநிறுத்தத்திற்கு CITU, BMS, INTUC, AITUC, இந்து மஸ்தூர் சபா, சேவா உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தோம். இதில் தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கார ணம் கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு தொழிற்சங்கமான BMS திடீரென விலகிக்கொண்டது. மற்ற தொழிற்சங்கங்கள் உறுதியுடன் பங்கேற்கின்றன.  இவ்வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து வங்கி ஊழியர் சங்கம் மற்றும் நிலக்கரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உறுதி தெரிவித்துள் ளன. தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு 12 அம்ச கோரிக்கைகளை அளித்தோம். இந்த கோரிக்கைகளில் BJP அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களையும் நிலம் பறிப்பு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். ரயில்வேயிலும் காப்பீட்டுத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும், தொலைதொடர்புத் துறையிலும்  தனியார் மயமாக்குவதையும் அதில் வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வருவதையும் நிறுத்தவேண்டும், ஊக வணிகத்தை தடை செய்ய வேண்டும், பொது விநியோக முறையை கலைப்பதை கைவிட வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் போன்றவை முக்கியமான கோரிக்கைகளாகும்.இக்கோரிக்கைகளில் தொழிற் சங்கங்களின் நிர்ப்பந்தம் காரண மாக குறைந்தபட்ச கூலிச் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், சமூக பாதுகாப்பை பரவலாக்குவது போன்றவற்றை பரிசீலிப்பதாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும் முக்கிய கோரிக்கைகளை எதையும் அரசு பரிசீலிக்கத் தயாராக இல்லைஎன்பதோடு மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்து வதில் பிடிவாதமாக நிற்கிறது. எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதியுடன் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைத்து தொழிலாளர்களும் செப்.2 பொது வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

36 ஆண்டு சோகத்திற்கு முடிவு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...

இந்திய மகளிர் ஹாக்கி அணி, 36 ஆண்டு களுக்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்று சாதனை படைத் துள்ளது.கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி 5-வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றது. எனினும் அது உறுதியற்ற இழுபறி நிலையாக இருந்தது.இந்நிலையில், ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி ஸ்பெயினையும், நெதர் லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் ஏதாவது ஒரு அணிதான் வெற்றிபெறப் போகிறது.ஆனால், இங்கிலாந்தும், நெதர்லாந்தும் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்று விட்டதால், அந்த அணிகளின் வெற்றி யில் முக்கியத்துவம் இல்லாமல் போனது.இதன்காரணமாக, உலக ஹாக்கி லீக் போட்டியில், 5-வது இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் ஆடுவதை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தி உள்ளது.இதையடுத்து, இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016-ஆம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, கடைசியாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பின் 36 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற் கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதுதான் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.தென் கொரியா, அர்ஜெண்டினா, இங்கி லாந்து, ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, ஆஸ் திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் தகுதியை பெற்றுள்ளன. 10-ஆவதாக இந்திய அணி இணைந்துள்ளது. ஓசியானியா கோப்பை, ஆப்ரிக்கா கோப்பை போட்டிகளின் முடிவில், மேலும் இரு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை!!!

அருமைத் தோழர்களே ! அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.வதந்திகளை நம்பாதீர் செப்டம்பர் 2 வேலை  நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்...மாநில சங்க அறிக்கை காண 

Friday 28 August 2015

ஆகஸ்ட் 2015 பணிநிறைவு - BSNLEUவாழ்த்துக்கள் ...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் இம் மாதம் ஆகஸ்ட் 2015 பணிநிறைவு செய்யும் தோழர்களுக்கு  - நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் உளப்பூர்வமான  வாழ்த்துக் களை  உரித்தாக்குகின்றது  ... இம்மாதத்திற்கான ஒருங்கிணைந்த பணிநிறைவு பாராட்டு விழா 29.08.15 அன்று மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 
பனி நிறைவு பெறும் தோழர்கள்.

 1. N .Jayalakshmi ,TTA ,O/o SDE(Phones),Thirunagar ,Madurai 

2. M. Laksham , STSO , SDOT ,Cumbum 

3. N .S .Mahalingam ,TM ,O /o SDE (Extl ),Palani   

4. P . Murugaiah,TS (O),AO (TR -II), O/o GM , BSNL ,Madurai 

5. R .Sabitha , STSO ,O/o AGM (NWOP -CM), TKM ,Madurai 

6. A .Subramanian ,TM,O /o SDE (Phones),NCR,Madurai 

7. K. Sangili ,TM, O/o SDE, (Phones) Chinnaalapatti
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU

மதுரையில் புத்தகத் திருவிழா 28.08.15 இன்று தொடங்குகிறது...

மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைக்கிறார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கும் பிரம்மாண்ட புத்தக திருவிழா செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவை வெள்ளி மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் துவக்கி வைக்கிறார். தினமும் மாலை 6 மணிக்கு பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவு, கவியரங்கம் போன்ற நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது. இதில் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உரையாற்ற உள்ளனர். இந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் வாசகர், எழுத்தாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள் பெருமளவில் இடம்பெறுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் சுமார் 10 இலட்சம் வாசகர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. .டி.எம், குடிநீர், முதலுதவி, கழிப்பறை, தேநீர், உணவக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் .கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வாசிப்பை அதிகப்படுத்துவோம் வளமாகுவோம்.