Monday 17 August 2015

உலக பாட்மிண்டன் சாய்னா நேவால் புதிய சாதனை . . .

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் புதிய சரித்திரம் படைத்தார்.இதன்மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் சாய்னா.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த் தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னா, உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார்.இறுதிச் சுற்றில், சாய்னாநேவால் 16-21, 19-21 என்றநேர் செட்களில் கரோலினாவிடம் தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கரோலினா தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.எனினும், இப்போட்டிமுழுவதுமே தன் அற்புதமான ஆட்டத் திறனாலும், அசாத்திய போராட்ட அணுகுமுறையாலும் இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் சாய்னா.உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னா மூலம் இந்தியாவுக்கு 5-வது பதக்கம் கிடைத்துள்ளது. உலக பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல்இந்தியர் பிரகாஷ் படுகோன் ஆவார். அவர் 1983-ல் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.---சாய்னா  நேவால்  பல வெற்றிகளை பெற நமது BSNLEUவாழ்த்துகிறது. 

No comments: