Monday 24 August 2015

செப்.2 வேலைநிறுத்தம்LIC ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு

எல்..சி ஊழியர்களின் 59-வது (மதுரை) கோட்டச்சங்க இரண்டுநாள் மாநாடு ஞாயிறன்று மதுரையில் பேரணியுடன் தொடங்கியது.இந்த பேரணியில் நமது BSNLEU சங்கம் சார்பாக கலந்துகொண்டு, அனைத்து தொழிற் சங்கம் சார்பாக CITU தலைமையில் மாநாடு வெல்ல வாழ்த்து தெரிவித்தோம்.  இந்தப் பேரணியில் மதுரைக்கோட்டத்தின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த எல்ஐசி ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பேரணியை கோரிப்பாளையம் அருகிலுள்ள ஆழ்வார்புரத்திலிருந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டச் செயலாளர் டி. செல்லக்கண்ணு துவக்கி வைத்தார். பொதுமாநாடு: பேரணியைத் தொடர்ந்து மதுரை .எம்.., அரங்கில் நடைபெற்ற பொதுமாநாட்டிற்கு கோட்டச்சங்கத் தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எம்.குன்னிகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார்.அவர் தமது உரையில், எல்ஐசியை வலுப்படுத்துவதற்கும், பாலிசிதாரர்களுக்கான அனைத்துச் சேவைகளையும் உறுதி செய்வதற்கும் என்றென்றும் அர்ப்பணித்துக் கொள்வோம். எல்ஐசி முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். அரசின் கொள்கைகள் எல்ஐசி, ஜிஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். குறிப்பாக நான்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும். மக்கள் வாழ்க்கைக்கும், சேமிப்பிற்கும் ஆதாரமான வேலைவாய்ப்பும் வருமானமும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். அதை வலியுறுத்தி செப்.2 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்பார்கள் என்றார்.பொதுமாநாட்டை வி.பிச்சை (சிஐடியு), சி.சந்திரசேகரன் (எல்ஐசி பென்சனர் சங்கம்), எச்.சங்கரகிருஷ்ணன் (எல்ஐசி அதிகாரிகள் சங்கம்), ஜே.ஜோசப் சுரேஷ்ராஜ்குமார் (வளர்ச்சி அதிகாரிகள் சங்கம்), சி. முத்துகுமாரசுவாமி (திருநெல்வேலி கோட்ட எல்ஐசி ஊழியர் சங்கம்), எஸ்.பாலசுப்பிரமணியன் (தென்மண்டல பொதுக்காப்பீட்டு ஊழியர்சங்கம்) ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் .சுவாமிநாதன் பொதுமாநாட்டை நிறைவு செய்து பேசினார். கோட்டம் முழுவதுமிருந்து 200 மகளிர் உட்பட 700 பேர் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் மாநாட்டில் பொதுச் செயலாளர் என்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.இன்று சார்பாளர்கள் மாநாடு: திங்களன்று சார்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டைத் தொடர்ந்து நடைபெறும் மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கில் தமுஎகச மாநில துணைத்தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் கருத்துரையாற்ற உள்ளார்.
---தோழமை வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: