சமீப காலமாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப்பில் உலா வரும் சில கலக்கல் காமெடிகள் இங்கே...இனி இப்படித்தான்...”குடி” மகனும் போலீஸும்..
”என்ன சார் இவ்ளோ போலீஸ் ஒயின்ஷாப்ல இருக்கீங்க? ட்யூட்டி நேரத்துலேயேவா?
யோவ் .. நாங்க குடிக்க வரல ஆளுகள அடிக்க வந்திருக்கோம்.
அய்யோ... சாரி சார் இனி குடிக்க மாட்டேன்...அடிக்காதீங்க..
யோவ்..உங்கள இல்லை...குடிக்க வேணாம்னு சொல்றவங்களை..
சார்..சார் அப்போ ரெண்டு பேர் என் வீட்டுக்கும் வாங்க சார் .
எதுக்குய்யா...
என் பொண்டாட்டி குடிக்க வேணாம்னு சொல்றா... போலீசே பாதுகாப்பு குடுக்குதுன்னா எதுவும் பேச மாட்டா...”
போலீஸ் பந்தபஸ்தோட குடிக்கிறதெல்லாம் ஒரு கெத்துதே...ன்!
AC சார் அந்த ACய போடுங்க...!DSP சார் VSOP குவார்ட்டர் ஒண்ணு..
கான்ஸ்டபிள் சார் கப், தண்ணி பாக்கெட்...
SP சார் சிப்ஸ், சாலட் கொண்டு வாங்க..!
"ஓகே, நீங்க போலாம்...!"
" ஏய்,
நில்லு. ஹெல்மெட் போடலை, ஃபைன் கட்டு..."
"சார், நான் சரக்கடிக்க டாஸ்மாக் கடைக்கு போறேன்...."
"ஓகே, நீங்க போலாம் சார்..."
No comments:
Post a Comment