தமுஎகச மற்றும் நிழல்கள் திரைப்பட சங்கம் சார்பில் கம்பம் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் கலந்துகொண்டு பேசியதாவது:மனித மனங்கள் அடி ஆழத்தில் உள்ள அன்பை ,பரிசுத்தமான நேசத்தை, வலியை எந்தப் படம் சுரண்டி எடுக்கிறதோ அதுதான் உலக சினிமா.எந்த சினிமா மனிதனை தூங்க விடாமல் செய்கிறதோ அது உலக சினிமா.எனது படங்களில் மன்னர்களைப் பற்றி எடுக்கவில்லை. சாதாரண அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய வலிகளைத் தான் படமாக எடுத்துத்துள்ளேன். அவர்களின் வலிகளை பதிவு செய்ய ஆசைபடுகிறேன். வாழ்க்கையில் அடித்தட்டு மக்கள் படும் வேதனைகள், ஆயிரமாயிரம் சிக்கல் நிறைந்தவை. ஒரு திரைப்படம் ,அல்லது குறும்படம் மக்களிடம் மாற்றத்தை உருவாக்க வேண்டும். கிராமங்களில் வாழ்வியல் பற்றிய நல்ல கதைகள் கொட்டிக் கிடக்கின்றன .கலைஞர்கள் கிராமப்புறத்திலிருந்து வரவேண்டும்.ஹாலிவுட் படங்கள் சாகசங்களை மட்டுமே நம்புகின்றன.கடந்த 25 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் தமுஎகச கலை -இலக்கிய வளர்ச்சியை மக்கள் முன் நிறுத்திவருகிறது. நல்ல வாழ்க்கைத்தரம் உயர பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அறிவும் ரசனை வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். இதற்கான பணியை தமுஎகச தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர் தாமிராவிழாவில் பேசிய இயக்குனர் தாமிரா ,தான் இயக்கிய மெகர் என்னும் குறும்படம் பல இளைஞர்களின் மனதை மாற்றியிருக்கிறது .இக் குறும்படத்தை பல இடங்களில் தமுஎகச ,கலை இலக்கிய பெருமன்றமும் வெளியிட்டுள்ளது. வரதட்சணை தொடர்பாக இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்றார்.இயக்குனர் ரவிக்குமார் விழாவில் வாழ்த்துரை வழங்கிய ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ஆர்.ரவிகுமார் ,தமுஎகச கலை இரவு மேடைகளின் மூலம் பார்த்து ,ரசித்த நிகழ்வுகளே நான் இயக்குனர் ஆவதற்கு உந்து சக்தியாக விளங்கியது.குறும்படங்கள் மூலம் வெளி உலகுக்கு அறிமுகம் ஆனேன்.தமுஎகச தான் என்னை முழுமையாக செதுக்கியது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.நிகழ்வுக்கு தமுஎகச திரை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அய்.தமிழ்மணி தலைமை வகித்தார்.வரவேற்புக் குழு தலைவரும் நடிகருமான ஜோ.மல்லூரி முன்னிலை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் வரவேற்று பேசினார்.நிகழ்வை வாழ்த்தி பேரா.அப்துல் சமது உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.எம்.சிவாஜி தொகுத்து வழங்கினார்.திரைப்பட இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணா, கிளை செயலாளர் அபுதாகீர் உள்ளிட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment