Sunday 23 August 2015

22.08.15திண்டுக்கல்லில் செப்-2 வேலை நிறுத்த கூட்டம்.

அருமைத் தோழர்களே ! 22.08.15 அன்று திண்டுக்கல்லில் செப்-2 வேலை நிறுத்த  விளக்க  கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு NFTE மாநில சங்க நிர்வாகி தோழர் C.விஜயரெங்கன் தலைமைதாங்கினார். BSNLEU நகர் கிளைச் செயலர் தோழர்.J. ஜோதி நாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் செப்டம்பர்-2 வேலை நிறுத்தத்திற்காண கோரிக்கைகளை விளக்கி, NFTE கிளைச் செயலர் தோழர். S.அருளானந்தம், SEWA பொறுப்பாளர் தோழர் A.முருகேசன் , TEPU மாவட்ட இணைச் செயலர், தோழர்.M. மதன முனியப்பன் ஆகியோர்  உரை நிகழ்த்தினர். 


அதன்பின் BSNLEU மதுரை மாவட்ட செயலரும், FORUM கன்வீனருமான தோழர். S. சூரியன் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது உரையில் நமது BSNL அதிகாரிகள் + ஊழியர்கள், BSNL  பாதுகாப்பிற்கு கடந்த ஏப்ரல் 21 & 22 ஆகிய இருநாட்கள் நடத்திய தேச பக்த போராட்டம்  குறித்தும், மத்திய அரசு எடுத்துவரும் பொதுத்துறை விரோத செயல்கள் குறித்தும், இந்திய நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களுடனும் நாம் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியத்தையும் கூறினார். இறுதியாக BSNLEU புறநகர் கிளைச் செயலர் தோழர்.A. குருசாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: