Sunday 30 August 2015

36 ஆண்டு சோகத்திற்கு முடிவு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...

இந்திய மகளிர் ஹாக்கி அணி, 36 ஆண்டு களுக்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்று சாதனை படைத் துள்ளது.கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி 5-வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றது. எனினும் அது உறுதியற்ற இழுபறி நிலையாக இருந்தது.இந்நிலையில், ஐரோப்பிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் ஹாக்கிப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி ஸ்பெயினையும், நெதர் லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் ஏதாவது ஒரு அணிதான் வெற்றிபெறப் போகிறது.ஆனால், இங்கிலாந்தும், நெதர்லாந்தும் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்று விட்டதால், அந்த அணிகளின் வெற்றி யில் முக்கியத்துவம் இல்லாமல் போனது.இதன்காரணமாக, உலக ஹாக்கி லீக் போட்டியில், 5-வது இடத்தைப் பிடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் ஆடுவதை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தி உள்ளது.இதையடுத்து, இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016-ஆம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, கடைசியாக 1980-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. அதன்பின் 36 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற் கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதுதான் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.தென் கொரியா, அர்ஜெண்டினா, இங்கி லாந்து, ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, ஆஸ் திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் தகுதியை பெற்றுள்ளன. 10-ஆவதாக இந்திய அணி இணைந்துள்ளது. ஓசியானியா கோப்பை, ஆப்ரிக்கா கோப்பை போட்டிகளின் முடிவில், மேலும் இரு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

No comments: