Thursday 6 August 2015

மதுவிலக்கு வந்தால் யாருக்கெல்லாம் நஷ்டம்?

டாஸ்மாக்கை மூடினால் ஆட்சியாளர்களின் பைகளில் கரன்ஸிகள் கொட்டாது என்பதால்தான் வருவாய் இழப்பு என காரணம் சொல்கிறார்கள். வருவாய் இழப்பு அர சுக்கு அல்ல. அரசியல்வாதிகளுக்குத்தான். 11 மதுபான நிறுவனங்கள், 7 பீர் கம்பெனிகள், 1 ஒயின் கம்பெனி என 19 நிறுவ னங்கள் டாஸ்மாக்குக்குசரக்குசப்ளை செய்கின்றன. 2011-ல் .தி.மு.. ஆட்சிக்கு வந்தபிறகுதான் 4 மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் பின்புலத்துடன் இயங்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வை எப்போதும் உண்டு. அதில் இரண்டு திராவிடக் கட்சிகளும் சளைத் தவை இல்லை. எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங் களும் தி.மு. ஆட்சியில் வளம் கொழித்தன.இப்போது மிடாஸூக்கு சுக்கிர திசை. இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்குவதில் டாஸ்மாக் அதிகாரிகள் காட்டும் அக்கறை யில் அவர்களின் பேங்க் பேலன்ஸ் எகிற ஆரம்பிக்கிறது. மதுபானத் தொழில் மிகப் பெரிய சந்தை என்பதால் அதிகாரிகள் மட்டத்தில் பணம் தண்ணீராய் பாய்கிறது. குடிபிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளைத் தேடி டாஸ்மாக் கடை களுக்குப் போனால் அது கிடைக்காது அல்லது எப்போதாவதுதான் கிடைக்கும். பிரபலமில்லாத பிராண்டுகள்தான் டாஸ்மாக்கில் இருக்கும். எந்த பிராண்டுகளை கொள் முதல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அதிகாரிகள் என்பதால், அவர் கள் காட்டில் கரன்ஸி மழை கொட்டுகிறது. ஆஃப், ஃபுல் பாட்டில்கள் மட்டுமே சரளமாகக் கிடைக்கும். குவார்ட்டர் பாட்டிலில் வருவாய் குறைவு என்பதால் அதையும் ஸ்டாக் வைக்காமல் பார்த்துக்கொள்வதும் அதிகாரிகளின் ராஜ்ஜியத்தில் நடக்கும் விவகாரம். இப்படி பலரின் பாக்கெட்டுகளில் வளம் சேர்க்கும் டாஸ்மாக்கை மூடினால் மது ஆலைகளை மூடவேண்டியிருக்கும். 
மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை... அறிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்களி டம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்.
பீர் வகைகள்...
* சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.* மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.* எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.* கல்ஸ்- தி.மு.. தலைமையின் வாரிசுகள்.* அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.* .எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.
மதுவகைகள்...
* யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.* மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.* சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் உறவினர் குழுமத்துக்கு சொந்தமானது.* எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன். * சபில் - பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு சொந்தமானது.* மிடாஸ்- .தி.மு.. தலைமைக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது.* எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.* எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.* கல்ஸ் - திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.* கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.* இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.

No comments: