தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் க. செல்வராஜுக்கு சிறந்த நாடக நடிகர் விருது வழங்கப் பட்டுள்ளது. நடிகவேள் எம்.ஆர். ராதாவின்
108வது பிறந்தநாள் விழாவை யொட்டி எம்.ஆர்.ராதாவின் ராஜபாட்டைஎன்ற பெயரில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனமும் புதுயுகம் தொலைக்காட்சியும் இணைந்து இந்த போட்டியை நடத்தின. இந்த நாடகப் போட்டியில் டாக்டர் செல்வராஜ் குழுவினரின் ‘கொலையில் என்னடா கவுரவம்’ என்ற நாடகமும் கலந்து கொண்டது. இந்த நாடகத்தில் நடித்ததற்காக டாக்டர் செல்வராஜ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். அந்த விருது வழங்கும் விழா கடந்த ஜூலை 31ம் தேதி சென்னை லேடி ஆண்டாள் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் ராம்கி, நடிகை சிம்ரன் ஆகியோர் இந்த விருதை டாக்டர் செல்வராஜுக்கு வழங்கினர். இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், நடிகர்கள் சிவக்குமார், பாக்யராஜ், பார்த்திபன், நடிகை ஸ்ரீப்ரியா, நிரோஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோழர்.டாக்டர்.க. செல்வராஜ் அவர்களுக்கு நமது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment