Sunday 30 August 2015

செப். 2 வேலைநிறுத்தம் உறுதியுடன் நடைபெறும் .10 தொழிற்சங்கங்கள் அறைகூவல்...

மோடி அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் உறுதியுடன் நடைபெறும் என INTUC அகில இந்தியத் தலைவர் G.சஞ்சீவி ரெட்டியும், CITU தலைவர் A.K..பத்மநாபனும் தெரிவித் துள்ளனர்.  இது தொடர்பாக புதுதில்லியில் நடைபெற்ற 10 தொழிற் சங்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகை யாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது :செப்டம்பர் 2 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெறுகிறது. இவ்வேலைநிறுத்தத்திற்கு CITU, BMS, INTUC, AITUC, இந்து மஸ்தூர் சபா, சேவா உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு விடுத்தோம். இதில் தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கார ணம் கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு தொழிற்சங்கமான BMS திடீரென விலகிக்கொண்டது. மற்ற தொழிற்சங்கங்கள் உறுதியுடன் பங்கேற்கின்றன.  இவ்வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து வங்கி ஊழியர் சங்கம் மற்றும் நிலக்கரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உறுதி தெரிவித்துள் ளன. தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு 12 அம்ச கோரிக்கைகளை அளித்தோம். இந்த கோரிக்கைகளில் BJP அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்தங்களையும் நிலம் பறிப்பு சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும். ரயில்வேயிலும் காப்பீட்டுத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும், தொலைதொடர்புத் துறையிலும்  தனியார் மயமாக்குவதையும் அதில் வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வருவதையும் நிறுத்தவேண்டும், ஊக வணிகத்தை தடை செய்ய வேண்டும், பொது விநியோக முறையை கலைப்பதை கைவிட வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் போன்றவை முக்கியமான கோரிக்கைகளாகும்.இக்கோரிக்கைகளில் தொழிற் சங்கங்களின் நிர்ப்பந்தம் காரண மாக குறைந்தபட்ச கூலிச் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், சமூக பாதுகாப்பை பரவலாக்குவது போன்றவற்றை பரிசீலிப்பதாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும் முக்கிய கோரிக்கைகளை எதையும் அரசு பரிசீலிக்கத் தயாராக இல்லைஎன்பதோடு மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்து வதில் பிடிவாதமாக நிற்கிறது. எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதியுடன் இந்தப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைத்து தொழிலாளர்களும் செப்.2 பொது வேலைநிறுத்தத்தை மகத்தான வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

No comments: