Thursday 13 August 2015

12.08.15 திட்டங்களை தீட்டிய மதுரை செயற்குழு . . .

அருமைத் தோழர்களே ! 12.08.15 அன்று மதுரை,தல்லாகுளம், CSC-TRCயில்  தோழர்.சி . செலவின் சத்தியராஜ், மாவட்ட தலைவர் தலைமையில் நமது மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் செயற்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.  செயற்குழுவை ,தமிழ் மாநில உதவிச் செயலர் தோழர் எஸ். சுப்பிரமணி பல்வேறு முக்கிய தகவல்களுடன் மத்திய மாநில சங்க செயல்பாடுகள்  மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத, தேசவிரோத செயல்கள் குறித்து முழுமையான விளக்கங்களுடன் சிறப்பான துவக்கவுரை நிகழ்த்தினர்..
செயற்குழுவின் ஆய்படு பொருளின் மீது அறிமுக உரையை மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் நிகழ்த்தினார். அதன்பின் ஆய்படு பொருளின் மீது 19 தோழர்கள் முழுமையான விவாதத்தில் பங்குபெற்றனர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்.பி. சந்திர சேகர், எஸ். ஜான் போர்ஜியா இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக மாவட்ட செயலர் தொகுப்புரைக்குப் பின், மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றியுரை கூறினார்...
முடிவுகள்
*  25.08.15 மதுரை பேரணியை  சக்தியாக நடத்துவது.
*  செப்டம்பர்-2 அகிலஇந்திய பொது வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது.
*  BSNL புத்தாக்கத்திற்கு  "அஞ்சல் அட்டை "இயக்கத்தை  முழுமையாக முடிப்பது.
*  மாவட்ட அளவிலான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது.
*  கிளைகள் தோறும் விளக்க கூட்டங்களை நடத்துவது.
*  மாநாடு நடத்தாத கிளைகள் விரைந்து முடிப்பது.
*  1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களின் OVER PAYMENT பிடித்தத்தை ரத்து செய்வது.
*  14.08.15 கோவை விரிவடைந்த மாநில செயற்குழுவிற்கு முழுமையான பங்கேற்ப்பு.
மாவட்ட செயலர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை  ரத்து செய்யக்கோரி  மாநில சங்க வழிகாட்டுதலின் அடிப்படையில் . . .
*  நோட்டிஸ் 
*  ஆர்ப்பாட்டம் 
*  அஞ்சல் அட்டை இயக்கம்  - ஆகியவற்றை நடத்துவது  என்றும் முடிவு செய்யப்பட்டது...

No comments: