இந்தியாவில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்ற மத்தியில் உள்ள மோடியின் அரசு முயற்சித்து வருவதாக BSNLஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் P.அபிமன்யு கோவையில் 14.08.15 அன்று நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் சாடினார். கோவையில் BSNL ஊழியர் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளியன்று ரயில்நிலையம் அருகிலுள்ள BSNL தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் K..சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் C..ராஜேந்திரன் வரவேற்று பேசினார். இதில் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் P.அபிமன்யு பங்கேற்று பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு தொழிலாளர்களை கொத்தடிமைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது, விவசாய நிலங்களை கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, அனைத்துபொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பது உள்ளிட்ட மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஆட்சிக்கு வந்த ஒன்னரை வருடங்களில் மிக,மிக வேகமாகசெயல்படுத்தி வருகிறது.தேர்தல் காலத்தில் மக்களிடம் வாக்குகள் சேகரிக்கச் சென்றபோது சாமான்ய குடும்பத்தில் இருந்து வந்தவராக காட்டிக் கொண்ட மோடி, தற்போது இந்தியாவில் 90 சதவிகித தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைகூட ஏற்காமல் ஊதாசினப்படுத்துகிறார். ஆனால், கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரத்து 255 கோடி ரூபாய் வரி சலுகையை அறிவித்து உள்ளார்.
அதோடு மட்டுமல்லாது தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறது. அவர்களிடமிருந்து நிலுவை மற்றும் நடப்பு வரிகளைவசூலிக்க எவ்வித நடவடிக்கையும் இந்த மோடி அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, ஹட்ச்.S.R.நிறுவனத்திடம் இருந்து வோடாபோன் நிறுவனம் தொலைதொடர்ப்பு நிறுவனத்திற்கான உரிமையை வாங்கியபோது அதற்காக நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரி 8 ஆயிரம் கோடி ரூபாயை ஏமாற்றி உள்ளது. அது தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாயாக மாறி உள்ளது. இதை வசூலிக்க மத்தியில் ஆண்ட காங்கிரசும், தற்போது ஆளும் பாஜகவும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்தியாவில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடினால் அபராதம் விதிக்கவும், சிறையில் அடைக்கவும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரமாக உள்ளது. எனவே, மோடி அரசை எச்சரிக்கும் விதத்தில் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் BSNL ஊழியர்கள் முழுமையாக கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதேபோல், BSNL ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் S..செல்லப்பா, மாநிலசெயலாளர் A..பாபு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். நிறைவாக மகேஸ்வரன் நன்றி கூறினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, BSNL ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோட்டை மேடு, நலான் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அரசு
BSNL டவர்கள்
(கோபுரங்கள்) அமைப்பதற்கு தனி நிறுவனம் அமைப்பதை வன்மையாக கண்டிப்பது, BSNLநிறுவனம் தற்போது அறிவித்துள்ள தரைவழி தொலைபேசியில் இரவு நேரங்களில் இலவச அழைப்புகள் மற்றும்
ரோமிங் வசதிகளை மக்களிடம் எடுத்துச் சென்று BSNL நிறுவனத்தை வலுப்படுத்துவது, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை கோவையில் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment