Monday 29 July 2013

30.07.2013- நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .

அருமைதோழர்களே! அனைவருக்கும்  வணக்கம். . . . . .

நமது UNITED FOFRUM  அறைகூவலுக்கிணங்க  . . . . . 

 30-07-2013 அன்று  மதியம்  1 மணிக்கு  மதுரை GM அலுவலகத்தில்  நடைபெறும்  ஆர்பாட்டத்தில்

  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 

கோரிக்கைகள் : 
  1. NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
  2. நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
  3. RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
  4. கேடர்களின் பெயர் மாற்றம்;
  5. 1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
  6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல்  அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
  7. பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
  8. STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
  9. TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
  10. காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
  11. வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
  12. BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
  13. 1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
  14. கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
  15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

இது போன்ற அதிமுக்கிய 29  கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 
    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர் 

    Thursday 25 July 2013

    100% அந்நிய முதலீடு அனுமதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் . . .

     டெலிகாமில்  FDI 100% மத்திய அரசு அனுமதிப்பதைக்  கண்டித்து ஆர்ப்பாட்டம் - 25.07.2013

    அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.

    தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74%லிருந்து 100% ஆகவும், பாதுகாப்புத் துறையில் 26%லிருந்து 49% ஆகவும் உயுத்துவது என்ற மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை நமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. மத்திய அரசின் இப்படு பாதகமான முடிவு இந்திய நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் .

    மத்திய அரசின் இத்தவறான முடிவு  சரியல்ல என பாதுகாப்புத்துறை  எச்சரித்தும் காங்கிரஸ் அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே மத்தியரசு எடுத்துள்ள மக்கள் விரோத முடிவான அந்நிய முதலீடு அதிகரிப்பை உடனடியாக கைவிடக்கோரி இந்திய நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் சங்கங்களும் மற்றும் ஊழியர்கள் சங்கங்களும் (FORUM) அறைகூவல் விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    தேனி
    தோழர் நாராயணன் - TEPU
    தோழர் மைக்கேல் சிரில்ராஜ்   - BSNLEU
    திண்டுக்கல்
    தோழர் சந்திரகுமார் - SNEA
    தோழர் ஆரோக்கியம் - BSNLEU
    தோழர்  ஜெகதீசன் - SNEA
    தோழர் ஜான் போர்ஜியா - BSNLEU
    மதுரை
    தோழர் எஸ்.சூரியன்  - BSNLEU
    தோழர் கே. முருகேசன் -NFTE
    தோழர் எம்.சந்திரசேகர் - SNEA
    தோழர் எஸ். கருப்பையா - AIBSNLEA
    தோழர் சி. செலவின் சத்யராஜ் - BSNLEU
    ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர.

    என்றும் தோழமையுடன் 
    எஸ். சூரியன் - மாவட்ட செயலர்

    Tuesday 23 July 2013

    25.07.2013 கண்டன ஆர்ப்பாட்டம்

    FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS

    மதுரை தொலை தொடர்பு மாவட்டம் 

    25.07.2013 கண்டன ஆர்ப்பாட்டம் 

    தோழர்களே! தோழியர்களே!!

    வணக்கம் ... பொதுத்துறையான நமது BSNL வளர்ச்சியில் கடந்த 13 ஆண்டுகளாக அக்கறை காட்டாத மத்திய அரசு இன்று தனியார் கம்பனிகளின் வளர்சிக்காக FDI அந்நிய முதலீட்டினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி தொலை தொடர்பு துறையில் 100 சத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது . மேலும் பாதுகாப்பு துறையிலும் ( DEFENCE) 49 சத அந்நிய முதலீட்டுக்கு ( FDI ) அனுமதி அளித்துள்ளது.

    ஆகவே, நாட்டிற்கு விரோதமான/ தொழிலளார்களுக்கு விரோதமான அந்நிய முதலீடு முடிவினை மத்திய அரசு கைவிட கோரி நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின்  கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்து உள்ளது.

              அதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் வருகின்ற
     25.07.2013 வியாழன் அன்று மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அனைவரும் திரளாக கலந்து கொள்ள  வேண்டுகிறோம் 

    தோழமையுடன்                         
    கே. முருகேசன்                                                                        எஸ். சூரியன் 
    தலைவர்                                                                                       கன்வீனர் 

    BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 
    மதுரை தொலை தொடர்பு மாவட்டம் 


    23.07.13 மாவட்ட சங்க செய்தி துளிகள்

    அருமை தோழர்களே ! வணக்கம் ...
    • 24.07.2013 புதன் காலை 11.00 மணி முதல் CTMX வளாகத்தில் BSNL  ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 45வது பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில்  உறுப்பினர்களின் DIVIDENTவழங்கப்படும்.
    • ஜூலை மாத  சம்பளத்தில் 78.2% IDA MERGER செய்து வழங்கப்படும். 
    • 10.06.2013 முதல் 31.06.2013 வரை 21 நாட்களுக்கான ARREARS ஆகஸ்ட் 2013 சம்பளத்தில்தான் வழங்கப்படும்.
    • ஜூலை மாத சம்பளத்தில், பெப்ரவரி வேலை நிறுத்தம் செய்ததில் ஒரு நாள் STRIKE பிடித்தம் மட்டும் செய்யப்படும்.    ( மற்றொருநாள் STRIKE பிடித்தம் AUGUST மாதத்தில் செய்யப்படும்).
    • PUNISHMENT உள்ளவர்களுக்கு 78.2% IDA சம்பள நிர்ணயம் செய்து தருவதில் கால  தாமதம் ஏற்படும்.
    • UTTARKANT நிவாரண நிதி அவரவர் அடிப்படை சம்பளத்தில் ஒரு நாள் பிடித்தம் செய்யப்படும் . ( BASICPAY /31 DAYS = நிவாரண நிதி ).
    • நமது சங்க உறுப்பினர்களுக்கான சந்தா தொகை JUNE மாத நிலுவை ரூ . 10 + JULY மாத சந்தா ரூ . 30 ஆக மொத்தம் ரூ . 40 இந்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.
    • PROFESSIONAL TAX ( தொழில் வரி ) SEPTEMBER மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

    CGM அவர்களுடன் பேட்டி - 23.07.2013 

    மதுரைக்கு  அலுவலக நிமித்தமாக வருகை தந்து இருந்த CGM அவர்களை நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பேட்டி கண்டு ஒரு சில பிரச்சினைகளின் தீர்வுக்காக விவாதித்தோம்.... சுமுக தீர்வுக்கு வழி வகுத்த CGM மற்றும் GM ஆகியோர்க்கு நமது பாராட்டுக்கள். பேட்டியில் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் எஸ் . சூரியன், ஆர். ரவிச்சந்திரன், சி. செல்வின் சத்யராஜ், எம் . நாராயணசாமி  ஆகிய மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    -என்றும் தோழமையுடன்,
    எஸ் . சூரியன் -  மாவட்ட செயலர் .


    Saturday 20 July 2013

    மாவட்ட சங்க செய்தி . . . 20.07.2013

    அருமை தோழர்களே!அனைவருக்கும்  வணக்கம் . . .

    நமது மாவட்டத்தில்  தற்போது  அதிமுக்கியமான பிரச்சனையாக உள்ள 1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்று அன்றைய சட்டப்படி பின்னர் இன்கிரிமென்ட் விருப்பம் கொடுத்தவர்கள், சுமார் 136 பேருக்கு நமது மாவட்டத்தில் OVERPAYMENT  ரூ. 20000/- முதல் ரூ. 1,75,000/- வரை பிடித்தம் செய்ய DOT/BSNL நிர்வாகம் 2012ல்  உத்தரவிட்டதை தடுத்து நிறுத்தி நமது மாவட்ட சங்கம் தொடர் முயற்சி எடுத்து ஈடுபதுவது அனைவரும் அறிந்த ஒன்றே. 

              நமது CHQ லிருந்து  பொதுசெயலர்  தோழர் பி. அபிமன்யு அவர்கள் டெல்லி கார்பரேட்  அலுவலகத்தில் மிகவும் அழுத்தமாக  இப்பிரச்சினையை எடுத்துள்ளார்.GS க்கு   நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..GSநிர்வாகத்திற்கு கொடுத்த கடிதத்தை நமது CHQ வெப்சைட்டிலும், அதன் நகல் நமது மாநில செயலர் தோழர் எஸ். செல்லப்பா அவர்களுக்கும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனுக்கும் அனுப்பியுள்ளார். 

                இக்காலகட்டத்தில்  OVERPAYMENTபிடித்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுகொண்டதற்கிணங்க  இதுகாறும் ஜூன் 2013 சம்பளம்வரை ஊழியர்களிடம் பிடித்தத்தை நிறுத்திவைக்க பட்டிருந்தது. ஜூலை 2013 சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கான முடிவை நிர்வாகம் எடுத்தவுடன் மீண்டும்  OVERPAYMENT பிடித்ததத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்தோம். முடியாத சூழலில் மாநில சங்கத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். முயற்சிகள் மாநில சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

                  இயலாத பட்சத்தில் ஊழியர்களிடம்   OVERPAYMENTபிடித்தம், மாதம் ரூ.1500/- பிடித்தம் செய்வதற்கு நிர்வாகம் இசைவு தந்துள்ளது என்பததை தெரிவித்து கொள்கிறோம். இருப்பினும் DOT/BSNL நிர்வாகம் எடுத்துள்ள இம்முடிவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்பதால் நீதி மன்றம் செல்வது என மாவட்ட சங்கம் முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை செய்து முடித்து விட்டது.

    கிளை செயலர்கள் கவனத்திற்கு . . .

            இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 136 தோழர்களுக்கும் நியாயம் கிடைத்திட சங்க பேதமின்றி சம்பந்தப்பட்டவர்களை அணுகி முழுமையான விபரங்களை தெரிவித்து வழக்குக்கான செலவீனங்களை சந்திப்பதற்கு ஒவ்வொருவரிடமும்  குறைந்தபட்சம் ரூ. 1000/- பெற்று SDOTமதுரை கிளை தலைவர்  தோழர் எஸ். பகவத்சிங்கம் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுகிறோம். அவர் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் : 94899 49091. 

    (20.07.13 அன்று NFTE - DS தோழர் கே. முருகேசனும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனும் இணைந்து  நமது பொது மேலாளர் அவர்களை சநதித்து கூட்டாக விவாதித்து  இப்பிரசினையிலும், கனரா வங்கி கூடுதல் பிடித்தத்திலும் நிர்வாகம் சுமூக நிலை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் .)

    என்றும் தோழமையுடன் . . .
    எஸ். சூரியன் 
    - மாவட்ட செயலர் -

    Thursday 18 July 2013

    19-07-2013 நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 30-07-2013 அன்று மாற்ற பட்டுள்ளது

    BSNL  EMPLOYEES  UNION
    MADURAI DISTRICT  -  MADURAI-2 

    18.07.2013   Call of the United Forum - Hold demonstrations on 30.07.2013.

    CEC of BSNLEU, held at Kolkata decided to go on agitational programme for the settlement of long pending problems. This programme includes demonstration on 19th July, 2013. However, the United Forum meeting which took place yesterday the 17.07.2013 has decided to hold the demonstrations on 30.07.2013. 
         Thus, CHQ calls upon the circle, district and branch secretaries to take initiative to hold the demonstrations on 30.07.2013, under the banner of United Forum.

    அருமை  தோழர்களே !
            19-07-2013 நடைபெற  இருந்த  ஆர்ப்பாட்டம்
     30-07-2013 அன்று மாற்ற பட்டுள்ளது 


    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர் 


    Wednesday 17 July 2013

    30-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

    அருமைதோழர்களே! அனைவருக்கும்  வணக்கம். . . . . .

    நமது UNITED FOFRUM  அறைகூவலுக்கிணங்க  . . . . . 

     30-07-2013 அன்று  மதியம்  1 மணிக்கு  மதுரை GM அலுவலகத்தில்  நடைபெறும்  ஆர்பாட்டத்தில்

      அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 

    கோரிக்கைகள் : 
    1. NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
    2. நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
    3. RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
    4. கேடர்களின் பெயர் மாற்றம்;
    5. 1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
    6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல்  அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
    7. பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
    8. STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
    9. TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
    10. காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
    11. வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
    12. BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
    13. 1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
    14. கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
    15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

    இது போன்ற அதிமுக்கிய 29  கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 
    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர் 

    16.07.2013 - விருதுநகரில் நடைபெற்ற பயிலரங்கம்

    நமது தமிழ் மாநில சங்கம் சார்பாக விருதுநகரில்  (16.07.2013) ஆறு தென் மாவட்டங்களின் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தோழர்களுக்கு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். 

    தோழர் K.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வகுப்பிற்கு தலைமை வகித்தார்.தோழர் S.ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.  நமது மாவட்ட செயலர் தோழர் S. சூரியன் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். 


    கருத்தரங்கில் பொதுச்செயலர் தோழர் P . அபிமன்யு உரையாற்றுகிறார் 
    கருத்தரங்கில் மாநில செயலர் தோழர் S. செல்லப்பா உரையாற்றுகிறார் 


    கருத்தரங்கில் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நமது மாவட்ட செயலர்
    தோழர் S. சூரியன்  உரையாற்றுகிறார் 

    பணி  ஒய்வு பெற்ற தோழர் பெருமாள்சாமியை வாழ்த்தி
    நமது மாவட்ட செயலரின் உரை  



    விருதுநகர் பயிலரங்கத்தில் கலந்து கொண்டோரில் ஓர் பகுதி 


    பணி  ஒய்வு பெற்ற பெருமாள்சாமிக்கு நமது மாவட்ட செயலர்
    தோழர் S. சூரியன் பொன்னாடை போர்த்துதல் 


    தோழர் S. செல்லப்பா, மாநில  செயலர், சுருக்கமாக வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றித் துவக்கி  வைத்தார். தோழர் P. அபிமன்யு, பொது செயலாளர் பேசுகையில் விகிதாச்சார அடிப்படையில் அங்கீகாரம் என்பதில் நமது சங்க அங்கீகாரம் என்றும் உத்திரவாதப்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். 7-வது சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் நமது சங்கமே முதன்மை சங்கமாக வெற்றி பெரும் என அறுதியிட்டு கூறினார். கொல்கத்தா மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றியும் விரிவாக கூறினார். அதே நேரம் நமது நிறுவனத்தை லாபகரமாக மீட்சி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், பணி கலாச்சாரம் மேம்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.

    78.2% IDA இணைப்பில் நமது சங்கத்தின் பங்களிப்பு  தான் பிரதானமானது என்பதையும் அவர் சூளுரைத்தார்.  நாம் நடத்த உள்ள போராட்டங்களின் கோரிக்கைகளை  விளக்கி மாநில, மாவட்ட  செயற்குழுக்களை  கூட்டி ஊழியர்களிடம்  போராட்ட உணர்வை வளர்க்க அனைவரும் முயற்சி எடுக்க பொது செயலர் வலியுறுத்தினார்.


    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர். 

    Monday 15 July 2013

    தலைமுறை காத்த தந்திக்கு . . . கனத்த இதயத்துடன் விடை கொடுத்தோம்

    தோழர்களே!
    நமது நாடு சுதந்திரத்திற்கு முன்பே தகவல் பரிமாற்றத்திற்காக உருவாகி 163 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வாழ்வோடு ஒன்றிட்ட தந்தி சேவை, வருமான குறைவு என்ற காரணத்தை சொல்லி இந்திய அரசும், நிர்வாகமும்  சேவை செய்த தந்தி பிரிவை, தேவை இல்லை என நிராகரித்ததை இதய வலியோடு விடை கொடுத்தோம் .

    இது குறித்து நமது மதுரை தோழர் S. சாத்தாவு, CSC, தல்லாகுளம், நமது உணர்வுகளை வெளிபடுதியுள்ளதை இங்கே வெளியிட்டுள்ளோம்.  


    - என்றும் தோழமையுடன் -

    எஸ். சூரியன்,  மாவட்ட செயலர் 


    Friday 12 July 2013

    மத்தியஅரசு, தந்திசேவை ரத்துசெய்வதை கண்டித்து BSNLEU ஆர்ப்பாட்டம் 12-07-2013

    அருமை  தோழர்களே !

    நமது துறையில் பாரம்பரியமாக  இயங்கி  வந்த  தந்தி சேவை  எதிர்வரும் 15.07.2013 முதல்  நிறுத்த மத்திய அரசு  முடிவு  செய்துள்ளதை  கண்டித்து  நமது SSA -யில் , தேனி , திண்டுக்கல்  மற்றும் மதுரை  ஆகிய  3 இடத்துலும்  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது .

    மதுரை 

    செல்வம் 
    செல்வின்சத்தியராஜ் 
    சூரியன் 

    தேனி 

    ஜான்சன் மாணிக்கராஜ் 
    நாராயணன் 
    வீமன் 
    சிரில் 

    திண்டுக்கல் 

    கணபதி 
    ஆரோக்கியம் 
    ஜான்போர்சியா 
    குருசாமி 

      ஆகிய  தோழர்கள்  கோரிக்கையை  விளக்கி  பேசினர் 

    என்றும் தோழமையுடன் 

    எஸ் . சூரியன் ,மாவட்டசெயலர் 






    நமது சங்கத்திற்கு நிதி தாருங்கள் . . . . .

    தோழர்களே !

     நமது  உரிமைக்காக  தொடர்ந்து போராடி வரும் , நமது பாதுகாவலன் BSNLEU  சங்கத்துக்கு நிதி  தாரீர் . . . . . 


                 மத்திய  சங்கத்துக்கு நிதி           :  ரூ .100
                  
                 மாநில சங்கத்துக்கு நிதி            :  ரூ .100  

                 மாவட்ட  சங்கத்துக்கு நிதி        :  ரூ .100 

                கிளை  சங்கத்துக்கு நிதி               :  ரூ .100  


    வசூல் செய்திட  வேண்டுகிறோம் 



    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர்

    தென்மண்டல தொழிற்சங்க பயிலரங்கம் - 16.07.2013

    தோழர்களே!

    நமது மாநில சங்கத்தின் முயற்சியால் முதற்கட்டமாக தென்மண்டலத்தில் உள்ள மதுரை, காரைக்குடி, விருதுநகர் , நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிளைச்செயளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் / மாநில சங்க நிர்வாகிகளுக்கான "பயிலரங்கம்" எதிர்வரும் 16.07.2013 (செவ்வாய்) அன்று விருதுநகர் VVS திருமண மகாலில் நடைபெற உள்ளது.

    இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு கலந்து கொண்டு நமது BSNL VIABILITY மற்றும் பல்வேறு கருத்துக்களை வழங்க உள்ளார்.  ஆகவே நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    பயிலரங்கம் சரியாக காலை 9.00 மணிக்கு துவங்கி விடுமென்பதால் குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டுகிறோம். சார்பாளர் கட்டணமாக ருபாய் 50/- வசூலிக்கப்படும்.

    இப்பயிலரங்கத்திற்கு சிறப்பு விடுப்பு  (SPECIAL CASUAL LEAVE) உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர்

    BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சுற்றறிக்கை

    தோழர்களே!

    அவசர அவசியம்:


    நமது மாவட்ட சங்கத்தின் கடந்த சுற்றறிக்கையிலேயே புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து தெரிவித்து இருந்தோம்.  இதுகாறும் ஓரிரு கிளைகளைத் தவிர மற்ற கிளைகளில் இருந்து புதிய உறுப்பினர் படிவம் வந்து சேரவில்லை. எனவே, தோழர்கள் உரிய முறையில் முயற்சி செய்து ஓரிரு தினங்களில் மாவட்ட சங்கத்திடம் புதிய உறுப்பினர் படிவங்களை சேர்ப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம். 

    மத்திய செயற்குழு முடிவுகள் :


    நமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொல்கத்தா நகரில் கடந்த 7-ம்  தேதி முதல் 9-ம் தேதி வரை தோழர் நம்பூதிரி தலைமையில் சீரும் சிறப்புமாக நடந்தேறி உள்ளது. இச்செயற்குழு தீர்வுக்காக உள்ள பிரச்சனைகள் குறித்து (PENDING DEMANDS) மிகவும் கூர்மையாக விவாதித்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. கிட்ட தட்ட 28 கோரிக்கைகளுக்காக மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை கீழே தந்துள்ளோம்.

    போராட்ட அறைகூவல் :

    1. NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
    2. நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
    3. RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
    4. கேடர்களின் பெயர் மாற்றம்;
    5. 1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
    6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல்  அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
    7. பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
    8. STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
    9. TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
    10. காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
    11. வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
    12. BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
    13. 1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
    14. கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
    15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;
    இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக கீழ்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

    • 19.07.2013      ....    ஆர்ப்பாட்டம்
    • ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா 
    • 4.9.2013 ஒரு நாள் வேலைநிறுத்தம் 
    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர் 


    Monday 8 July 2013

    09-07-2013தொலைத்தொடர்பு துறை யில் மத்திய அரசின் 100%FDI கண்டித்து ஆர்ப்பாட்டம்

    தோழர்களே!  

    மத்தியஅரசு  டெலிகாம்துறையில் 100 % FDI

      அந்நியநேரடிமூலதனம்டெலிகாம்துறையில்நூறுசதம் (FDI)புகுத்திதுவது என்று எடுத்துள்ளமத்திய அரசின்  முடிவை  கண்டித்து BSNLலில் உள்ள  அணைத்து  சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 09-07-2013மதியம் 1 மணிக்கு  கண்டன  ஆர்ப்பாட்டம்  நடத்திட  அறைகூவல்  விடுக்கப்பட்டள்ளது . அதன் அடிப்படையில் மதுரை GM  அலுவலகத்தில் நடைபெறும்  மதிய உணவுஇடைவேளை  1 மணிக்கு  நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில்          அணைவரும்திரளாககலந்துகொள்ளவேண்டுகிறோம்.

                                    நாள் :  09-07-2013   செவ்வாய்கிழமை 
                                     
                                 இடம் : GM  அலுவலகம் , மதுரை -2

                          நேரம் : மதியம்  1 மணி 

    என்றும் தோழமையுடன் 

    எஸ் . சூரியன் ,மாவட்டசெயலர் 



            

    Saturday 6 July 2013

    05-07-13 TNTCWU வரவேற்பு குழு கூட்டம்

    அருமை தோழர்களே அனைவருக்கும் வணக்கம் . . .

    நமது மதுரை TNTCWU  மாவட்ட மாநாட்டிற்க்கான வரவேற்பு குழு கூட்டம் 05.07.13 மாலை நமது BSNLEU சங்க அலுவலகத்தில்  வரவேற்பு குழு தலைவர்  தோழர் எஸ். சூரியன்  தலைமையில்  நடைபெற்றது. 
    வரவேற்பு குழுவில் உள்ள அனைத்து  தோழர்களும் பங்கு பெற்று  மாநாட்டு  நன்கொடை வசூல், மற்றும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்த நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். 

    வரவேற்பு குழு பொருளாளர் தோழர் என். சோனைமுத்து  மாநாட்டு நன்கொடை புத்தகங்கள் கிளை வாரியாக கொடுக்கப்பட்ட விவரங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார். வரவேற்பு குழுவில் உள்ள அனைத்து  தோழர்களும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் கடந்த 26.06.2013 அன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கான  முத்தரப்பு பேச்சுவார்த்தை, அதனை ஒட்டி ஏற்பட்ட உடன்பாடு குறித்து அனைவரும் வெகுவாக பாராட்டி பேசினார்கள். 
    • இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்த வரவேற்பு குழு கூட்டத்தை நடத்துவது.
    • அடுத்து நடைபெறும் வரவேற்பு குழு கூட்டத்தில் மாநாட்டு நிதியினை அனைவரும்  முழுமையாக சமர்பிப்பது.
    • மாநாட்டு நிகழ்ச்சி நிரலை இறுதிப்படுதுவது. 
    போன்ற முடிவுகள்  கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
    இக்கூட்டத்தில் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்
    எஸ். ஜான்போர்ஜியா, சி. செல்வின் சத்யராஜ் TNTCWU மாவட்ட செயலர் தோழர் வி. சுப்பராயலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
    இறுதியாக  தோழர் ராமலிங்கம்  நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் மாவட்ட செயலர் 

    பாராட்டுகிறோம்...



    நன்றி: தினமணி.

    Thursday 4 July 2013

    NLC போரட்டதிற்கு 4-7-2013 ஆதரவு ஆர்பாட்டம்

    மதுரையில் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ...

    தோழர் K.முருகேசன் DS/NFTE தலைமை தாங்கினார்.
    தோழர் C.செல்வின் சத்யராஜ் COS/BSNLEU 
    தோழர் S.கருப்பையா DS/AIBSNLEA 
    தோழர் S.கணேசன் ACS/SNEA 
    தோழர் V.சுப்புராயலு DS/TNTCWU 
    தோழர் G.அன்பழகன் TEPU 
    தோழர் G.R.தர்மராஜன் -PENSIONER'S  UNION 

    ஆகியோர் உரையாற்றினார்கள்.

    தேனியில் 

    தோழர் P.தேசிங்கு BSNLEU தலைமை தாங்கினார்.
    தோழர் ஜான்சன் மாணிக்கம் NFTE 
    தோழர் R.SELVAM -SEWA 
    தோழர் சிரில் -BSNLEU 
    தோழர் செல்வமணி-TEPU 

    ஆகியோர் உரையாற்றினார்கள்.

    திண்டுக்கல்லில் 

    தோழர் சந்திரகுமார் -SNEA  தலைமை தாங்கினார்.
    தோழர். C.விஜயரெங்கன் NFTE
    தோழர் S.ஜான் போர்சியா BSNLEU 
    தோழர் முருகேசன் -FNTO 
    தோழர் ஜெகதீசன் -SNEA 
    தோழர் ஆரோக்கியம் -BSNLEU 

    ஆகியோர் உரையாற்றினார்கள்.

    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர்

    ஆர்பாட்டம் 

    Wednesday 3 July 2013

    04.07.2013 மதிய நேர ஆர்ப்பாட்டம் - NLC வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக

    தோழர்களே!

    03.07.2013 முதல் NLC பொது துறை நிறுவனத்தின் 5 சத பங்கை விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து NLC ஊழியர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளனர்.

    NLC ஊழியர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக நமது BSNL-ல்  உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக "ஆதரவு ஆர்ப்பாட்டம்" நடத்திட மாநில சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. 

    அதன் அடிப்படையில் 04.07.2013 அன்று மதியம் 1.00 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

    என்றும் தோழமையுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர்   

    Tuesday 2 July 2013

    மாநில செயற்குழு கூட்டம் - 29.06.2013 - சென்னை

    தோழர்களே! 

    நமது BSNLEU மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 29.06.2013 அன்று  சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் K. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை தோழியர் V.P. இந்திரா ஏற்றி வைத்தார். மாநில உதவி செயலர் தோழர் S. சுப்பிரமணியம் உத்தராகண்ட் பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி உரையாற்றினார்.

    நமது மாநில செயலர் தோழர் S. செல்லப்பா செயற்குழு ஆய்படுபொருள் மீதான அறிமுக உரையை நிகழ்த்தினார். நமது சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P. அபிமன்யு சிறப்பானதொரு துவக்க உரையாற்றினார். சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் கோவிந்தராஜ்,  ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் தோழர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    செயற்குழுவில் மாவட்ட செயலர்களும், மாநில சங்க நிர்வாகிகளுமாக மொத்தம் 26 பேர் விவாதத்தில் பங்கு கொண்டனர். செயற்குழுவில் NLC ஆதரவு இயக்கம் உட்பட 17 முடிவுகள் எடுக்கப் பட்டது.   

    அவற்றில் சில:
    • 78.2 சத பஞ்சப்படி இணைப்பினை பெற்று தந்த மத்திய சங்கத்தை மாநில செயற்குழு மனதார பாராட்டியது ;
    • NLC நிறுவனத்தின் 5 சத பங்கு விற்பனையை எதிர்த்து 03.07.2013 முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக 04.07.2013 அன்று தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ;
    • 15.07.2013 முதல் நிறுத்தப்படும் தந்தி சேவை தொடர்ந்திட கோரி தமிழகத்தில் 11.07.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது ;
    • 16.07.2013 அன்று விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல பயிலரங்கத்தில் அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்வது ; சார்பாளர் கட்டணமாக ரூபாய் 50/-என நிர்ணயிக்கப்பட்டது. இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் கலந்து கொள்கிறார்.
    • மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ. 300/- வசூல் செய்து, தலா ரூ. 100/- பிரித்து அனுப்புவது ;
    • ஜூலை 2013 சம்பளத்தில் புதிய சந்தா ரூ. 30/- பிடித்தம் செய்வது
    • சேலம், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் TTA தேர்வில் ஏற்பட்டுள்ள  வழக்கு குறித்து மாநில சங்கம் விரைந்து முடிப்பது ;
    • 02.06.2013 அன்று நடைபெற்ற JTO தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்குவது ; 
    • மாவட்ட மட்டங்களில் MODEM, CABLE, DROPWIRE  தேவைகள் குறித்து 15 நாட்களுக்குள் மத்திய சங்கத்திற்கு தகவல் தெரிவிப்பது ;
    • நாகர்கோவிலில் ஆகஸ்ட் 9 மற்றும் 10 தேதிகளில்  நடைபெறும் TNTCWU  மாநாட்டை வெற்றிகரமாக்குவது ;
    • ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ANOMALY  பிரச்சனை தீர்விற்கு தகவல்களை அனுப்புவது ;






    தோழமை வாழ்த்துக்களுடன்,
    S. சூரியன் - மாவட்ட செயலர்.





    அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு NLC ஊழியர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

     04.07.2013 மாலை 5.00 மணி

    ஜான்சி ராணி பூங்கா, மதுரை  

    மத்திய அரசே !  NLC பங்குகளை விற்காதே !!

    மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவன பங்குகளை பெருமுதலாளிகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. கடந்த BUDGET-ல்  கூட STEEL AUTHORITY OF INDIA , BHEL, IOC  போன்ற நிறுவனங்களின் பங்குகளை ரூபாய் 30,000 கோடிக்கு விற்கப் போவதாக அறிவித்தது.

    அரசு மூலதனத்தை எடுத்து தனியாரின் கைகளுக்கு மாற்றுவதே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. நவீன தாராளமய கொள்கைகள் நமது நாட்டின் வளர்ச்சியை பலவீனப்படுத்தி உள்ளது.
    தற்போதும் INSURANCE, BANK, TELECOM , PETROLEUM போன்ற நவரத்னா நிறுவனங்களை தனியார் கைகளில் ஒப்படைக்க துடிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் நெய்வேலியில் உள்ள நிலக்கரி நிறுவனமான NLC-ன் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
    2G SPECTRUM ஒதுக்கீடு செய்வதில் 1.76 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு; நிலக்கரி படுகைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் 1.86 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர் இந்திய ஆட்சியாளர்கள். மத்திய காங்கிரஸ் கட்சி கடை பிடிக்கும் அதே கொள்கையை தான் BJP-ம் கடை பிடிக்கிறது. BJP ஆட்சி காலத்தில் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு ஒரு தனி அமைச்சரே நியமித்தனர்.

    2003 மின்சார மத்திய சட்டத்தின் படி, தனியார் நிறுவனங்களின் மின் உற்பத்திக்கு  ஊக்கம் அளித்ததால், இந்தியாவின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு  ஏற்பட்டு, தொழில்நலிவுற்று மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது நெய்வேலி NLC நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு பெற்று வரும் 1116 மெகா வாட்டையும் தட்டிபறித்திட மத்திய அரசு முயல்கிறது. 

    எனவே, நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்த்து  "NLC ஊழியர்கள் 03.07.2013 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை" நடத்த உள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை மதுரை அனைத்து தொழிற் சங்கங்கள் ஆதரிப்பதோடு, மத்திய அரசை கண்டித்து பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.

    CITU - AIIEA - BSNLEU - BEFI - MUTA - TANTSAC தொழிற்சங்க கூட்டமைப்பு - மதுரை.