FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS
மதுரை தொலை தொடர்பு மாவட்டம்
25.07.2013 கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம் ... பொதுத்துறையான நமது BSNL வளர்ச்சியில் கடந்த 13 ஆண்டுகளாக அக்கறை காட்டாத மத்திய அரசு இன்று தனியார் கம்பனிகளின் வளர்சிக்காக FDI அந்நிய முதலீட்டினால் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை மீறி தொலை தொடர்பு துறையில் 100 சத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது . மேலும் பாதுகாப்பு துறையிலும் ( DEFENCE) 49 சத அந்நிய முதலீட்டுக்கு ( FDI ) அனுமதி அளித்துள்ளது.
ஆகவே, நாட்டிற்கு விரோதமான/ தொழிலளார்களுக்கு விரோதமான அந்நிய முதலீடு முடிவினை மத்திய அரசு கைவிட கோரி நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்து உள்ளது.
அதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் வருகின்ற
25.07.2013 வியாழன் அன்று மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்
தோழமையுடன்
கே. முருகேசன் எஸ். சூரியன்
தலைவர் கன்வீனர்
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
மதுரை தொலை தொடர்பு மாவட்டம்
No comments:
Post a Comment