Saturday 20 July 2013

மாவட்ட சங்க செய்தி . . . 20.07.2013

அருமை தோழர்களே!அனைவருக்கும்  வணக்கம் . . .

நமது மாவட்டத்தில்  தற்போது  அதிமுக்கியமான பிரச்சனையாக உள்ள 1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்று அன்றைய சட்டப்படி பின்னர் இன்கிரிமென்ட் விருப்பம் கொடுத்தவர்கள், சுமார் 136 பேருக்கு நமது மாவட்டத்தில் OVERPAYMENT  ரூ. 20000/- முதல் ரூ. 1,75,000/- வரை பிடித்தம் செய்ய DOT/BSNL நிர்வாகம் 2012ல்  உத்தரவிட்டதை தடுத்து நிறுத்தி நமது மாவட்ட சங்கம் தொடர் முயற்சி எடுத்து ஈடுபதுவது அனைவரும் அறிந்த ஒன்றே. 

          நமது CHQ லிருந்து  பொதுசெயலர்  தோழர் பி. அபிமன்யு அவர்கள் டெல்லி கார்பரேட்  அலுவலகத்தில் மிகவும் அழுத்தமாக  இப்பிரச்சினையை எடுத்துள்ளார்.GS க்கு   நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்..GSநிர்வாகத்திற்கு கொடுத்த கடிதத்தை நமது CHQ வெப்சைட்டிலும், அதன் நகல் நமது மாநில செயலர் தோழர் எஸ். செல்லப்பா அவர்களுக்கும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனுக்கும் அனுப்பியுள்ளார். 

            இக்காலகட்டத்தில்  OVERPAYMENTபிடித்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுகொண்டதற்கிணங்க  இதுகாறும் ஜூன் 2013 சம்பளம்வரை ஊழியர்களிடம் பிடித்தத்தை நிறுத்திவைக்க பட்டிருந்தது. ஜூலை 2013 சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கான முடிவை நிர்வாகம் எடுத்தவுடன் மீண்டும்  OVERPAYMENT பிடித்ததத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்தோம். முடியாத சூழலில் மாநில சங்கத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளோம். முயற்சிகள் மாநில சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

              இயலாத பட்சத்தில் ஊழியர்களிடம்   OVERPAYMENTபிடித்தம், மாதம் ரூ.1500/- பிடித்தம் செய்வதற்கு நிர்வாகம் இசைவு தந்துள்ளது என்பததை தெரிவித்து கொள்கிறோம். இருப்பினும் DOT/BSNL நிர்வாகம் எடுத்துள்ள இம்முடிவு இயற்கை நீதிக்கு புறம்பானது என்பதால் நீதி மன்றம் செல்வது என மாவட்ட சங்கம் முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை செய்து முடித்து விட்டது.

கிளை செயலர்கள் கவனத்திற்கு . . .

        இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 136 தோழர்களுக்கும் நியாயம் கிடைத்திட சங்க பேதமின்றி சம்பந்தப்பட்டவர்களை அணுகி முழுமையான விபரங்களை தெரிவித்து வழக்குக்கான செலவீனங்களை சந்திப்பதற்கு ஒவ்வொருவரிடமும்  குறைந்தபட்சம் ரூ. 1000/- பெற்று SDOTமதுரை கிளை தலைவர்  தோழர் எஸ். பகவத்சிங்கம் அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுகிறோம். அவர் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் : 94899 49091. 

(20.07.13 அன்று NFTE - DS தோழர் கே. முருகேசனும், நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியனும் இணைந்து  நமது பொது மேலாளர் அவர்களை சநதித்து கூட்டாக விவாதித்து  இப்பிரசினையிலும், கனரா வங்கி கூடுதல் பிடித்தத்திலும் நிர்வாகம் சுமூக நிலை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் .)

என்றும் தோழமையுடன் . . .
எஸ். சூரியன் 
- மாவட்ட செயலர் -

No comments: