Saturday, 6 July 2013

05-07-13 TNTCWU வரவேற்பு குழு கூட்டம்

அருமை தோழர்களே அனைவருக்கும் வணக்கம் . . .

நமது மதுரை TNTCWU  மாவட்ட மாநாட்டிற்க்கான வரவேற்பு குழு கூட்டம் 05.07.13 மாலை நமது BSNLEU சங்க அலுவலகத்தில்  வரவேற்பு குழு தலைவர்  தோழர் எஸ். சூரியன்  தலைமையில்  நடைபெற்றது. 
வரவேற்பு குழுவில் உள்ள அனைத்து  தோழர்களும் பங்கு பெற்று  மாநாட்டு  நன்கொடை வசூல், மற்றும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்த நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். 

வரவேற்பு குழு பொருளாளர் தோழர் என். சோனைமுத்து  மாநாட்டு நன்கொடை புத்தகங்கள் கிளை வாரியாக கொடுக்கப்பட்ட விவரங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார். வரவேற்பு குழுவில் உள்ள அனைத்து  தோழர்களும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் கடந்த 26.06.2013 அன்று நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கான  முத்தரப்பு பேச்சுவார்த்தை, அதனை ஒட்டி ஏற்பட்ட உடன்பாடு குறித்து அனைவரும் வெகுவாக பாராட்டி பேசினார்கள். 
  • இன்னும் ஓரிரு வாரங்களில் அடுத்த வரவேற்பு குழு கூட்டத்தை நடத்துவது.
  • அடுத்து நடைபெறும் வரவேற்பு குழு கூட்டத்தில் மாநாட்டு நிதியினை அனைவரும்  முழுமையாக சமர்பிப்பது.
  • மாநாட்டு நிகழ்ச்சி நிரலை இறுதிப்படுதுவது. 
போன்ற முடிவுகள்  கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்
எஸ். ஜான்போர்ஜியா, சி. செல்வின் சத்யராஜ் TNTCWU மாவட்ட செயலர் தோழர் வி. சுப்பராயலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக  தோழர் ராமலிங்கம்  நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் மாவட்ட செயலர் 

No comments: