தோழர்களே!
நமது மாநில சங்கத்தின் முயற்சியால் முதற்கட்டமாக தென்மண்டலத்தில் உள்ள மதுரை, காரைக்குடி, விருதுநகர் , நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிளைச்செயளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் / மாநில சங்க நிர்வாகிகளுக்கான "பயிலரங்கம்" எதிர்வரும் 16.07.2013 (செவ்வாய்) அன்று விருதுநகர் VVS திருமண மகாலில் நடைபெற உள்ளது.
இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு கலந்து கொண்டு நமது BSNL VIABILITY மற்றும் பல்வேறு கருத்துக்களை வழங்க உள்ளார். ஆகவே நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
பயிலரங்கம் சரியாக காலை 9.00 மணிக்கு துவங்கி விடுமென்பதால் குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டுகிறோம். சார்பாளர் கட்டணமாக ருபாய் 50/- வசூலிக்கப்படும்.
இப்பயிலரங்கத்திற்கு சிறப்பு விடுப்பு (SPECIAL CASUAL LEAVE) உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment