டெலிகாமில் FDI 100% மத்திய அரசு அனுமதிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - 25.07.2013
அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.
தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74%லிருந்து 100% ஆகவும், பாதுகாப்புத் துறையில் 26%லிருந்து 49% ஆகவும் உயுத்துவது என்ற மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை நமது சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. மத்திய அரசின் இப்படு பாதகமான முடிவு இந்திய நாட்டின் இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் .
மத்திய அரசின் இத்தவறான முடிவு சரியல்ல என பாதுகாப்புத்துறை எச்சரித்தும் காங்கிரஸ் அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே மத்தியரசு எடுத்துள்ள மக்கள் விரோத முடிவான அந்நிய முதலீடு அதிகரிப்பை உடனடியாக கைவிடக்கோரி இந்திய நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட நமது BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் சங்கங்களும் மற்றும் ஊழியர்கள் சங்கங்களும் (FORUM) அறைகூவல் விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் நமது மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி
தோழர் நாராயணன் - TEPU
தோழர் மைக்கேல் சிரில்ராஜ் - BSNLEU
திண்டுக்கல்
தோழர் சந்திரகுமார் - SNEA
தோழர் ஆரோக்கியம் - BSNLEU
தோழர் ஜெகதீசன் - SNEA
தோழர் ஜான் போர்ஜியா - BSNLEU
மதுரை
தோழர் எஸ்.சூரியன் - BSNLEU
தோழர் கே. முருகேசன் -NFTE
தோழர் எம்.சந்திரசேகர் - SNEA
தோழர் எம்.சந்திரசேகர் - SNEA
தோழர் எஸ். கருப்பையா - AIBSNLEA
தோழர் சி. செலவின் சத்யராஜ் - BSNLEU
ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர.
என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன் - மாவட்ட செயலர்
No comments:
Post a Comment