Tuesday 2 July 2013

மாநில செயற்குழு கூட்டம் - 29.06.2013 - சென்னை

தோழர்களே! 

நமது BSNLEU மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 29.06.2013 அன்று  சென்னை கிண்டி CITU அலுவலகத்தில் மாநில தலைவர் தோழர் K. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. சங்க கொடியை தோழியர் V.P. இந்திரா ஏற்றி வைத்தார். மாநில உதவி செயலர் தோழர் S. சுப்பிரமணியம் உத்தராகண்ட் பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி உரையாற்றினார்.

நமது மாநில செயலர் தோழர் S. செல்லப்பா செயற்குழு ஆய்படுபொருள் மீதான அறிமுக உரையை நிகழ்த்தினார். நமது சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் P. அபிமன்யு சிறப்பானதொரு துவக்க உரையாற்றினார். சென்னை தொலைபேசி மாநில செயலர் தோழர் கோவிந்தராஜ்,  ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் தோழர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

செயற்குழுவில் மாவட்ட செயலர்களும், மாநில சங்க நிர்வாகிகளுமாக மொத்தம் 26 பேர் விவாதத்தில் பங்கு கொண்டனர். செயற்குழுவில் NLC ஆதரவு இயக்கம் உட்பட 17 முடிவுகள் எடுக்கப் பட்டது.   

அவற்றில் சில:
  • 78.2 சத பஞ்சப்படி இணைப்பினை பெற்று தந்த மத்திய சங்கத்தை மாநில செயற்குழு மனதார பாராட்டியது ;
  • NLC நிறுவனத்தின் 5 சத பங்கு விற்பனையை எதிர்த்து 03.07.2013 முதல் நடைபெறும் கால வரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக 04.07.2013 அன்று தமிழகத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது ;
  • 15.07.2013 முதல் நிறுத்தப்படும் தந்தி சேவை தொடர்ந்திட கோரி தமிழகத்தில் 11.07.2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது ;
  • 16.07.2013 அன்று விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல பயிலரங்கத்தில் அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்வது ; சார்பாளர் கட்டணமாக ரூபாய் 50/-என நிர்ணயிக்கப்பட்டது. இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் கலந்து கொள்கிறார்.
  • மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ. 300/- வசூல் செய்து, தலா ரூ. 100/- பிரித்து அனுப்புவது ;
  • ஜூலை 2013 சம்பளத்தில் புதிய சந்தா ரூ. 30/- பிடித்தம் செய்வது
  • சேலம், மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் TTA தேர்வில் ஏற்பட்டுள்ள  வழக்கு குறித்து மாநில சங்கம் விரைந்து முடிப்பது ;
  • 02.06.2013 அன்று நடைபெற்ற JTO தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்குவது ; 
  • மாவட்ட மட்டங்களில் MODEM, CABLE, DROPWIRE  தேவைகள் குறித்து 15 நாட்களுக்குள் மத்திய சங்கத்திற்கு தகவல் தெரிவிப்பது ;
  • நாகர்கோவிலில் ஆகஸ்ட் 9 மற்றும் 10 தேதிகளில்  நடைபெறும் TNTCWU  மாநாட்டை வெற்றிகரமாக்குவது ;
  • ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ANOMALY  பிரச்சனை தீர்விற்கு தகவல்களை அனுப்புவது ;






தோழமை வாழ்த்துக்களுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர்.





No comments: