Thursday, 27 June 2013

மீண்டும் ஒரு அத்தியாயம்.Monday, 24 June 2013

மக்கள் சொத்தான NLC-ன் 5% பங்கு விற்பனை - மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை

தோழர்களே !

தமிழகத்தில் கேந்திரமான பொதுத்துறை நிறுவனமான மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 5 சதவீத பங்குளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்துள்ளது. 

மத்திய அரசின் இத்தகைய முடிவுக்கு நமது BSNL ஊழியர் சங்கம் கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

தென்இந்தியாவின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்கிற NLC நிறுவனத்தின் 5% பங்கு விற்பனை எதிராக தொழிலாளர்கள் ஒன்று பட்டு போராட முடிவு செய்துள்ளனர். NLC-யின் 1% பங்கினைக்கூட விற்பதற்கு தமிழக தொழிலாளர்களும், உழைப்பாளி மக்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். லாபகரமாக இயங்கி வரும் NLC நிறுவனத்தில் 5% பங்கு விற்பனை என்பது மத்திய அரசின் தனியார் மாய கொள்கை ஆகும்.

மத்திய அரசின் இப்போக்கிற்கு எதிராக தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும்,தொழிற்சங்கங்களும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். எதிர் வரும் 3-7-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததிற்கு NLC யில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் அறை கூவல் விடுத்துள்ளன.


 மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.
என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர் 
மனிதாபிமான கடமையாற்றுவோம்.Human bridge created by army in Uttarakhand to help the locals. We Salute !

தோழர்களே !

உத்தரகாண்ட் மாநிலம் மழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது. கேதார்நாத் பகுதியில் மட்டும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் பீறிட்டுக் கிளம்பி, எதிர்பட்டதையெல்லாம் சுருட்டிச் சென்றுள்ளது. சுமார் 200 கிராமங்கள் அழிந்தே போயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

இப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தில் பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரங்களை நீட்டிகொண்டிருக்கின்றன. நமது மத்திய சங்கமும் BSNL-ல் பணிபுரியும் அனைவரிடத்திலும் சம்பளத்தில் ரூபாய் 200 நிவாரண நிதியாக பிடித்தம் செய்ய நமது CMD-க்கு கடிதம் எழுதியுள்ளது. 

மனிதாபிமான அடிப்படையில் நாம் அனைவரும் நிதி உதவி செய்வதுதான் இன்றைய அவசிய அவசர  கடமையாகும்.என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர் 
BSNL நிதி ஆதாரத்தை உயர்த்த
       
நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம்.


தோழர்களே ! 

ரூபாய் 8,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தில் BSNL இருக்கும் இத்தருணத்திலும், ஊழியர்களுக்கு தம் சம்பளத்தில் கணிசமான உயர்வை தரும் 78.2 சத IDA இணைப்பை நாம் கூட்டமைப்பின் மூலம் வென்றெடுத்துள்ளோம். ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாம் இதனை சாதித்திருக்கின்றோம் என்பதும் உண்மை. நாட்டில் வேறெங்கும் இதுபோன்று நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் தம் ஊழியர்களுக்கு இதுபோன்ற ஊதிய உயர்வுக்கு ஒத்துக்கொண்டதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. ஆகவே இத்தருணத்தில் நமது BSNL-ஐ நிமிரச்செய்து, லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.  இதற்காக நாம் கடினமாக உழைத்து நமது BSNL-ன் சேவைத் தரத்தை உயர்த்தி வருவாயை அதிகரிக்க வேண்டும். 

நமது வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் நடந்து அவர்களை திருப்தியடையச் செய்வதன் மூலம், BSNL-க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வர ஆவண செய்யவேண்டும். சுருங்கக்கூறின், நாம் நமது “வேலைக் கலாச்சாரத்தை” மேம்படுத்தவேண்டும். 

தொழிற்சங்க மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிச்சயமாக அரசாங்கத்தின் BSNL விரோத கொள்கைகளிருந்து BSNL-ஐ காப்பாற்ற தவறாது. கூட்டமைப்பு உரிய காலங்களில் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களும் கிடைக்க ஆவண செய்யும். ஆனால் மற்றெல்லாவற்றையும் விட, BSNL ஊழியர்களாகிய நாம் நமது நிதி வளத்தை முன்னேற்றுவதற்க்கு கடினமான முயற்சியுடன் கூடிய சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும். 

ஆம், இதுவே நாம் ஒன்றுகூடி நமது நிறுவனத்திற்க்கு கைமாறு செய்ய சரியான தருணம். ஆதலால் இதற்கான நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூட்டமைப்பு நடத்தவுள்ளது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுகூடி இதனை மாபெரும் வெற்றியாக்க வேண்டும். 

என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர் 
26/06/2013 பெருந்திரள் ஆர்பாட்டம்.

26/06/2013 அன்று நடைபெறவுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கான ஆர்ப்பாட்டம். நமது BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக மதியம் 1 மணிக்கு மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

                                                        தோழைமையுடன்,
V. சுப்புராயலு                                                                                             S. சூரியன் 
மாவட்ட செயலர்,                                                                   மாவட்ட செயலர்,
TNTCWU                                                                                                              BSNLEU


Friday, 21 June 2013

வாழ்த்து நிகழ்ச்சி

கடந்த 14/6,15/6 & 16/6 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற இன்சூரன்ஸ் ஊழியர்களின் AIIEA 57வது கோட்ட மாநாட்டில் நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழைமை பூர்வமான வாழ்த்து நிகழ்ச்சி.

Wednesday, 19 June 2013

எதிர்வரும் 15/07/2013 முதல் தந்தி சேவையை நிறுத்துவதற்கு நமது இலாகா எடுத்துள்ள முடிவு குறித்து 18/06/2013  "தினமணி"-யின் தலையங்கத்தை பார்வைக்கு முன்வைத்துள்ளோம். 

Monday, 17 June 2013

தோழர் M.சௌந்தர் பணிநிறைவு பாராட்டு விழா


தோழர் M.சௌந்தர் 
பணிநிறைவு பாராட்டு விழா 
                              தோழர்களே !  நமது  BSNLEU சங்கத்தின் சார்பாக மதுரையில்  30/04/2013 அன்று  பணி நிறைவு செய்த நமது மூத்த தோழர் (உசிலை சௌந்தர் என்று அனைவராலும் அன்பாய் அழைக்கப்பட்ட) சௌந்தரராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சியின் ஒரு சில பகுதியை நிழற்படங்களாக உங்கள் பார்வைக்காக இங்கே தந்துள்ளோம். 

Friday, 14 June 2013

மதுரை Level  -IV வளாகத்தில்
நன்றி அறிவிப்பு கூட்டம் 

தோழர்களே! 
             நமது BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு 78.2% IDA இணைப்பில் பெற்றுள்ள வெற்றியை கொண்டாடும் முகத்தானும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவும் மதுரை தல்லாகுளம் பகுதியில்  14.06.2013 அன்று காலை சிறப்புகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் சந்திரசேகர் SNEA (DS) தலைமை தாங்கினார். சுமார் 35 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.

           இக்கூட்டத்தில் கீழ்கண்ட தோழர்கள் ஒப்பந்த விளக்கமும் நன்றியும் தெரிவித்து உரையாற்றினர். 

                         தோழர் எல். கண்ணன்  DS WRU
                         தோழர் வீ . சூரப்பன் CHQ-ORG.Secy. TEPU
                         தோழர் எஸ். கந்தசாமி DS SEWA
                         தோழர் ஆண்டியப்பன் ADS AIBSNLEA
                         தோழியர் பரிமளம் ACS NFTE
                         தோழர் சி. செல்வின் சத்யராஜ் COS BSNLEU
                         தோழர் G.P. பாஸ்கரன் CS WRU
                         தோழர் V.K. பரமசிவம் CHQ Advisor AIBSNLEA

        இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தும்  ஒற்றுமையை பேணி பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தும் கூட்டமைப்பின் கன்வீனரும் BSNLEU மாவட்ட செயலருமான தோழர் எஸ். சூரியன் உரையாற்றினார்.

          சிறப்பான ஏற்பாடு செய்திருந்த தல்லாகுளம் பகுதி தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர்


13.06.2013 திண்டுக்கல் கூட்டம் 

தோழர்களே!  13.06.2013 அன்று திண்டுக்கல் தொலைபேசி நிலையத்தில் 78.2% IDA இணைப்பிற்கான போராட்ட ஒப்பந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்  தோழர் பழனிவேல் SNEA தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்பந்த விளக்கம் பற்றியும், நன்றி தெரிவித்தும்  கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.

                             தோழர் சந்திரகுமார் SNEA 
                             தோழர் விஜயரெங்கன் NFTE 
                             தோழர் உதயசூரியன் TEPU 
                              தோழர் ஜான் போர்ஜியா  BSNLEU 

இக்கூட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தது பாராட்டுக்குரியது. இறுதியாக தோழர் மதனமுனியப்பன் TEPU நன்றியுரை கூறினார். திண்டுக்கல் தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. 

தோழமையுடன் 
S . சூரியன்
மாவட்ட செயலர்-   Increment stagnation in the cadres of RM/Gr. 'D'   -  

Letter written by GS to GM (Estt.,), BSNL C.O.


Thursday, 13 June 2013

நடக்க இருப்பவை 

தோழர்களே !

நமக்கு கிடைக்க வேண்டிய 78.2%  IDA இணைப்பை ஓராண்டு காலம் இழுத்தடித்த DOT & BSNL  நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய 2 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டு, 12.06.2013 முதல் இந்திய நாடு முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு, DOT & BSNL  நிர்வாகம் 10.06.2013 அன்று உத்தரவு இட்டதை கொண்டாடும் முகத்தானும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் முகத்தானும் மதுரை LEVEL - IV  பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

             நாள்      :       14.06.2013 வெள்ளிக்கிழமை

             நேரம்   :       காலை 10.30 மணிக்கு

              இடம்   :        LEVEL - IV  வளாகம், மதுரை.

சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் தோழமையுடன்,
S . சூரியன், FORUM  CONVENER  & DS BSNLEU   
வெல்லட்டும் ...  வெல்லட்டும் என வாழ்த்துகிறோம் 

ஜூன் 14, 15 மற்றும் 16 தேதிகளில் காப்பீட்டுக் கழக ஊழியர்களின் AIIEA 57வது கோட்ட மாநாடு, மதுரை துரையப்பா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொதுத்துறை பாதுகாப்பிற்காக தொடர்ந்து போராடிவரும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம். 

16/06/2013 ஞாயிறு காலை 9 மணிக்கு துவங்கிடும் பேரணியை வாழ்த்திட நமது தோழர்கள் அனைவரும் அனுப்பானடி அம்பேத்கார் சிலை அருகே கூடிட வேண்டுகிறோம்.

என்றும் தோழமையுடன் 
S. சூரியன் 
BSNLEU - மதுரை மாவட்டச் செயலர் 


13.06.2013 நிர்வாகத்துடன் பேட்டி

அருமைத் தோழர்களே! வணக்கம் ...

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக 13.06.2013 அன்று நிர்வாகத்திடம் பேட்டி கண்டோம். நிர்வாகத்தின் தரப்பில் GM / DGM(HR) / AGM(Admin) ஆகியோரும் ஊழியர் தரப்பில் தோழர்கள் S. சூரியன், C. செல்வின்சத்யராஜ் , R. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கீழ்க்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.

Ø  Lev 4 வளாக லிப்ட் இயக்குவது குறித்து 
Ø  தோழர் சுரேஷ் Gr.'D', மதுரையிலிருந்து திருநகர் மாற்றல் 
Ø  CSC தல்லாகுளத்திற்கு TTA மாற்றல் 
Ø  தோழர் செல்வம் TM, KKNலிருந்து VLM மாற்றல் 
Ø  ப்ராஜெக்ட் Vijay ஊழியர்களுக்கான இன்சென்டிவ் பட்டுவாடா 
Ø  தோழர் மணிவண்ணன் TM, தற்காலிக மாற்றல் 
Ø  NEPP - 18 தோழர்களுக்கான ஒப்புதல் 
Ø  சர்வீஸ் டைரக்டரி வெளியிடுவது 
Ø  விடுபட்ட LTC பட்டுவாடா (தோழர் நடராஜன் & கோவிந்தசாமி)
Ø  விளாம்பட்டி, வில்லாபுரம் கூடுதல் ஒப்பந்த ஊழியர் நியமனம் 
Ø  ஒப்பந்த ஊழியர்களுக்கான EPF பெறுவது குறித்து 
Ø  தோழர் கார்த்திகேயன் TTA/TEI இடமாற்றம் குறித்து 
Ø  தோழியர் வசந்தா Gr.'D', மேலூர் மாற்றல் 
Ø  தோழர் சூசை ராயப்பன் TM,  மாற்றல் குறித்து 
Ø  தோழர் R. முத்து TM, அப்பீல்


ஆகிய பிரச்சனைகளுடன் ஒருசில பிரச்சனைகளும் விவாதித்தோம். நிர்வாகத் தரப்பில் சுமூகத் தீர்விற்கு வழிவகை செய்த பொது மேலாளருக்கு நமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

78.2 % IDA INSTANT CALCULATOR

Wednesday, 12 June 2013

நமது மாவட்டத்தில் OVERPAYMENT பிடித்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் 136 பேர் பிரச்சனை

நடக்க இருப்பவை 

தோழர்களே !

நமக்கு கிடைக்க வேண்டிய 78.2%  IDA இணைப்பை ஓராண்டு காலம் இழுத்தடித்த DOT & BSNL  நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம், தர்ணா ஆகிய 2 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டு, 12.06.2013 முதல் இந்திய நாடு முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு, DOT & BSNL  நிர்வாகம் 10.06.2013 அன்று உத்தரவு இட்டதை கொண்டாடும் முகத்தானும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் முகத்தானும் மதுரை LEVEL - IV  பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

             நாள்      :       14.06.2013 வெள்ளிக்கிழமை

             நேரம்   :       காலை 10.30 மணிக்கு

              இடம்   :        LEVEL - IV  வளாகம், மதுரை.

சிறப்பு கூட்டத்திற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

என்றும் தோழமையுடன்,
S . சூரியன், FORUM  CONVENER  & DS BSNLEU   

...   ...   ...   நடந்தவை  ...   ...   ...

தோழர்களே!

நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 12.06.2013 (புதன் கிழமை) அன்று மாலை GM  அலுவலக மனமகிழ் மன்றத்தில்  நன்றி அறிவிப்பும் 78.2% IDA இணைப்பு ஒப்பந்த விளக்க கூட்டமும்  நடைபெற்றது.  

75 பெண் தோழியர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்திற்கு தோழர் K . முருகேசன், DS  NFTE  தலைமை தாங்கினார்.  போராட்டத்தின் வெற்றியை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.

தோழர் S . முத்துக்குமார் - DS  FNTO 
தோழர் M . சந்திரசேகரன் - DS SNEA 
தோழர் L . கண்ணன் - DS WRU 
தோழர் A . அருணாசலம் - ACS AIBSNLEA 

இறுதியாக தோழர் S . சூரியன் - FORUM  CONVENER  & DS BSNLEU  நிறைவுரை ஆற்றினார். 

என்றும் தோழமையுடன்,
S . சூரியன், DS