Friday, 7 June 2013

06.06.2013 திண்டுக்கல்லில் தர்ணா

தோழர்களே!

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக திண்டுக்கல் ரெவன்யு மாவட்ட தோழர்கள் பங்கேற்ற தர்ணா 06.06.2013 வியாழன் அன்று திண்டுக்கல் தொலைபேசியகம் முன்பாக நடைபெற்றது.

தர்ணாவிற்கு தோழர். P. சந்திரகுமார், ADS-SNEA தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் கன்வீனரும், BSNLEU மாவட்டச் செயலருமான தோழர் S. சூரியன் தர்ணாவை துவக்கிவைத்து உரையாற்றிய பொழுது

78.2% IDA-வை 01.01.2007 முதல் சம்பளத்துடன் உடனடியாக இணைக்கவேண்டும்; ஒப்பந்தம் ஏற்பட்டு ஓர் ஆண்டு ஆகியும் தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் நேர்மையற்ற நிலைப்பாட்டை சாடினார்.

கோரிக்கையை விளக்கி ..........
தோழர் K. முருகேசன் D/S - NFTE
தோழர் O. துரை - AIPWA
தோழர் C. விஜயரெங்கன் – DP - NFTE
தோழர் V.K. பரமசிவம், CHQ அட்வைசர் - AIBSNLEA
தோழர் M. மதன முனியப்பன் - TEPU
தோழர் S. கந்தசாமி D/S - SEWA
தோழர் S. முபாரக் அலி - TNGEA
தோழர் சேதுராமலிங்கம் - AIPWA
ஆகியோர் பேசினர்.

தர்ணாவை தோழர் S. ஜான்போர்சியா, மாநில உதவித்தலைவர் BSNLEU முடித்து வைத்து உரையாற்றினார். தோழர் A. பழனிவேல், SNEA நன்றி கூறினார். தர்ணாவில் 160 தோழர்கள் கலந்து சிறப்புச் சேர்த்தனர்.
வாழ்த்துக்களுடன்.
S. சூரியன், D/S BSNLEU


இன்று 07.06.2013 தேனியில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.

No comments: