மனிதாபிமான கடமையாற்றுவோம்.
உத்தரகாண்ட் மாநிலம் மழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது. கேதார்நாத் பகுதியில் மட்டும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் பீறிட்டுக் கிளம்பி, எதிர்பட்டதையெல்லாம் சுருட்டிச் சென்றுள்ளது. சுமார் 200 கிராமங்கள் அழிந்தே போயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன ஆனது என்பதே தெரியவில்லை.
இப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தில் பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரங்களை நீட்டிகொண்டிருக்கின்றன. நமது மத்திய சங்கமும் BSNL-ல் பணிபுரியும் அனைவரிடத்திலும் சம்பளத்தில் ரூபாய் 200 நிவாரண நிதியாக பிடித்தம் செய்ய நமது CMD-க்கு கடிதம் எழுதியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் நாம் அனைவரும் நிதி உதவி செய்வதுதான் இன்றைய அவசிய அவசர கடமையாகும்.
என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment