Monday 31 March 2014
லேப்-டாப்பை பிரித்து பொருத்திய மாணவிக்கு டாக்டர் பட்டம்.
லேப் - டாப்பை பிரித்து பொருத்திய, கோவை தனியார் பள்ளி நான்காம் வகுப்பு மாணவிக்கு, லண்டன், 'வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை' டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து உள்ளது.
கோவை, சாயிபாபா காலனியைச் சேர்ந்தவர், பிரபு மகாலிங்கம். இவருடைய, 10 வயது மகள் ஆதர்ஷினி. இவர், கோவை இந்தியன் பப்ளிக் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இம்மாணவி, லேப் - டாப்பை, 15 நிமிடம் 23 நொடிகளில், உதிரி பாகங்களாக பிரித்து மீண்டும் பொருத்தியதற்காக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
ஆதர்ஷினி கூறியதாவது:லேப் - டாப்பை தனித்தனியே பிரித்து மீண்டும் பொருத்த, 15 நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதை செய்து காண்பித்ததற்காக, கடந்தாண்டு, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம்பிடித்தேன். இவற்றின் வாயிலாக, லண்டன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் பல்கலை, மார்ச் 22ல், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆதர்ஷினி மேலும்,மேலும் வளர BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
Sunday 30 March 2014
மதுரை ..தோழர்.பா. விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை மக்களவைத்
தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 29) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்
பா.விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.மதுரை மக்களவைத் தொகுதி இடதுசாரி கூட்டணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன், கூட்டணி கட்சியினருடன் மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் வந்தார். ஆட்சியரும் தொகுதி தேர்தல் அதிகாரியுமான
இல.சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மாற்று வேட்பாளராக, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்
செய்தார். அவருடன், எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, லாசர்,
மாநில செயற்குழு வெங்கட்ராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஜோதிராம், பொன்னுத்தாய்,
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் பா.காளிதாஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் க.ஜான்மோசஸ்,
அருந்தமிழர் விடுதலை இயக்க தென் மண்டலச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர். முன்னதாக, தியாகி பாலு, பி.ராமமூர்த்தி ஆகியோர்
திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். லீலாவதி
புகைப்படத்துக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர்,வேட்பாளர்,தோழர். பா.விக்ரமன்செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள 3
லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கனரக இயந்திர தடவாளத்
தொழிற்சாலைகளை கொண்டு வர மக்களவையில் போராடுவேன்.மதுரையில் இன்னொரு ரயில் முனையம்
அமைக்கவும், சிறுதொழில்கள் மற்றும் பொதுத் துறைகளைக் காக்க பாடுபடுவேன்.மதுரை
கம்யூனிஸ்ட் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலில் மகத்தான வெற்றியைப்
பெறுவேன் என்றார்.
சொத்து விவரம் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன்
தனது சொத்து விவரங்களை, வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் : எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள நான்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். குற்றவழக்குகள் ஏதும் இல்லை.
என்னிடம் ரூ,3 ஆயிரம், மனைவி ராதாமணியிடம் ரூ. 500 ரொக்கம் கையிருப்பு உள்ளது. ராமநாதபுரம் சாலையிலுள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு வங்கிக்
கணக்கில் ரூ. 768, ஸ்டேட் வங்கியின் விவசாய வளர்ச்சி வங்கியில் சேமிப்பு கணக்கில்
ரூ. 25,910, மகள் ஆதிரா பெயரில் ஸ்டேட் வங்கி அண்ணா நகர் கிளையில் ரூ. 1,070,
சிட்டி யூனியன் வங்கி எஸ்.எஸ். காலனி கிளையில் ரூ. 443 இருப்புள்ளது.
Saturday 29 March 2014
1943 மார்ச் -29,கைய்யூர் தியாகிகள் தினம். . .
விவசாயிகளின் எழுச்சி,கேரளாமாநிலம்கையூர்கிராமத்தில்நடைபெற்றது,அப்போதுஅந்தவிவசாயிகள்மீதுஅன்று பிரிட்டிஷ் நிர்வாகம் 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டநாள்தான்,மார்ச் 29,1943. போலீஸ் உதவியுடன் மற்ற வழிகளில் துன்புறுத்த நிலச்சுவான்தாரர்களாக , கடன் பொறிகளை கொண்டு அயராது தள்ளப்பட்ட கிராமத்தில் ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் குரல்ஒடுக்கப்பட்ட நாள். Kayyur கேரளவிவசாய புரட்சியின் தொட்டில் , காசர்கோடு மாவட்டத்தில்அமைந்துள்ளது.Kariangodeநதி( பெரிய 'THEJESWANI'நதிக்கரையில் அமைந்துள்ள ,கிராமத்தில்Kayyur கிளர்ச்சியை பிரபலமானது. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வரலாற்று போராட்டம் நடத்தப்பட்டது.மார்ச் 29,1943 இல் இந்த சம்பவம் தொடர்பாக விவசாய போராளிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நாளில் கையூர் தியாகிகள் நினைவை போற்றுவோம்.
Friday 28 March 2014
நமது BSNLEU மதுரை மாவட்ட நிகழ்ச்சி குறித்து CHQ...
அருமைத் தோழர்களே! நாம் மதுரையில் கடந்த 23.03.2014 அன்று நடத்திய, மகளீர் தினம், BSNLEU தினம், பகத்சிங் தினம் குறித்து நமது மத்திய சங்கம் தனது வலைத் தளத்தில் கீழ்க்கண்டவாறு பாராட்டி வெளிட்டு உள்ளது.
நமது மத்திய சங்கத்திற்கு, குறிப்பாக நமது பொதுச்செயலர், தோழர். P.அபிமன்யு அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
.....என்றும் தோழமையுடன் ---எஸ். சூரியன்,D/S-BSNLEU
இலங்கை தீர்மானம் :- இந்தியா புறக்கணித்தது சரியல்ல!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு பதிலாக, இலங்கை அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடந்த போது, அதை இந்திய அரசு புறக்கணித்தது சரியான அணுகுமுறை அல்ல.
இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆயினும், இலங்கைத் தமிழர்களின் சொல்லொணாத்துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிகாரப்பரவல் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு மேலான உரிமைஎன்றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தியிருப்பது, தமிழர் பகுதிகளை இன்னும் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது ஆகியவை தொடர்கின்றன.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், இலங்கை ராணுவனத்தினருக்கும் இடையிலான யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இலங்கை ராணுவத்தின் மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரித்து குற்றமிழைத் தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நியாயமான கோரிக்கை எழுந்தது.ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 2012ம் ஆண்டும், 2013ம் ஆண்டும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்திட வேண்டுமெனவும், அதிகாரப் பரவல் அளித்திடவேண்டுமென்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம்அமலாக்கவில்லை.
இப்பின்னணியில்வியாழனன்று (27.3.2014 மனித உரிமைஆணையத்தில் முன்மொழியப்பட்டதீர்மானத்தை இந்திய அரசாங்கம் ஆதரித்திருக்க வேண்டும் அல்லது மற்ற நாடுகள் முன்மொழிந்த தீர்மானம் இந்தியாவுக்கு ஏற்புடையது இல்லை என்றால், அதில் சில திருத்தங்களோடு இந்திய அரசாங்கமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டியிருக்க வேண்டும். மாறாக, இந்திய அரசாங்கம் புறக்கணித்தது என்பது சரியான அணுகுமுறையல்ல.
மேலும், தற்போது இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயல்பாகவே பெரும்பான்மை பலம் இல்லாத அரசே ஆகும். அப்படிப்பட்ட நிலையில், இதுபோன்ற கொள்கைப்பூர்வமான முடிவை தானாகவே மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மாறாக, இப்பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
Thursday 27 March 2014
குஜராத் வளர்ச்சி ஒரு மாரீச மான் . . .
நரேந்திர மோடி பாஜகவின் பிரதம வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்கள் அனைத்தும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக அமர்ந்து விட்டால் இந்தியாவும் குஜராத் போல் பார்ப்பவர்கள் கண்ணைக் கூசவைக்கும் வகையில் பிரகாசமாக ஜொலிக்கும் என்று துதி பாட ஆரம்பித்தன. வலதுசாரி முதலாளிகளின் ஊடகங்களுடன், தங்களை நடுநிலையாளர்களாக அறிவித்துக் கொள்ளும் ஊடகங்களும் நமோ பஜனையை பாடாத நாளே இல்லை என்று கூறலாம்.
இவை புகழ்கின்ற குஜராத்தில் மக்கள் சந்தித்து வருகின்ற பிரச்சனைகள் குறித்தும், அங்கு வளர்ந்து வரும் செல்வந்தர்களின் பணக்குவியலும், அம்பானி, அத்வானி போன்றவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளும், சாதாரண மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளும், பொது விநியோகமும், சுகாதாரமும் பற்றி இவர்களுக்கு தெரியாதா? இவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாகக் கூட தெரிந்திருக்கும்.ஆனால் அவைகளை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் இவைகளுக்கு இல்லை. இவையெல்லாம் தாங்கள் விரும்பும் நபர் தலைவராக வருவதற்கு எதிரான காரணிகள் என்பதால் அவற்றை மூடி மறைக்கின்றன.மோடி 2001 அக்டோபர் முதல் குஜராத் முதல்வராக இருந்து வருகிறார்.
கடந்த 13 ஆண்டுகளில் குஜராத்தில் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மோடியின் ஆட்சியில் விவசாயம் தனது முன்னுரிமையை இழந்துள்ளது. சுமார்4 லட்சம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு மோட்டார் பம்புகளை இயக்க மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர்.கிராமப்புறப்பகுதிகளில் நாளொன்றுக்கு ரூ.11க்கு மேல் சம்பாதிக்கும் நபரையும், நகர்ப்புறங்களில் ரூ.17க்குமேல் சம்பாதிக்கும் நபரையும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று கருத முடியாது என்று குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் சுற்றறிக்கை கூறியுள்ளது. இந்த சுற்றறிக்கை அரசின் இணையதளத்தில் காணமுடியாது.அரசு அலுவலகங்களின் அதிகாரிகளின் பாதுகாப்பில் இது பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய திட்டக்குழு 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண மனுவில் கிராமப்புறத்தில் ரூ.26ம் நகர்ப்புறத்தில் ரூ.32ம் வறுமைக்கோட்டு அளவாக நிர்ணயிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.அதை எதிர்த்து பாஜகவும், நரேந்திர மோடியும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர். ஆனால் தாங்கள் ஆளும் மாநிலங்களின் நிலைமையை மூடி மறைத்து விட்டார்கள்.கடந்த 13 ஆண்டுகளில் குஜராத் அரசின் கடன்கள் அதிகரித்துள்ளன. இந்திய மாநிலங்களின் கடன் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 2008-09ம் ஆண்டில் அதன்கடன் 87 ஆயிரத்து பத்து கோடி, 2009-10ம் ஆண்டில் அதன் கடன் 98ஆயிரத்து 528 கோடி, 2010-11ல் அதன் கடன் 1லட்சத்து12 ஆயிரத்து 462 கோடி இருந்தது. இதுதற்போது 1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சுமார் 450 லட்சம் கோடி டாலர்கள் மதிப்புடைய அந்நிய நேரடி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக 2011ம் ஆண்டில் நடந்த ’துடிக்கும் குஜராத் ’ உச்சி மாநாட்டில் மோடி கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நியநேரடி முதலீடுகளின் மொத்த மதிப்பு 290லட்சம் கோடிகள் மட்டுமே.
” குஜராத் மாநிலம், 2011-12 சமூக பொருளாதார ஆய்வு ” அறிக்கையின்படி
2011ம் ஆண்டில் சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு மேலான அந்நிய முதலீடு உறுதிமொழிகள் பெறப்பட்டதில் வெறும் 29 ஆயிரத்து 813 கோடி ரூபாய்கள் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. அதேபோல் சுமார் 8300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில் 250 மட்டுமே நிறைவேறியுள்ளது. அந்நிய முதலீடு பற்றி மோடிபொய் சொல்லி வருகிறார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு பற்றி மட்டும் தவறாகக் கூறுவதில்லை. பொருளாதாரத்திலும் பொய் சொல்கிறார் என்பதே யதார்த்தம். நன்றி...தீக்கதிர்
Subscribe to:
Posts (Atom)