Saturday, 22 March 2014

மார்ச் 22 : மக்கள் தலைவர் ஏ.கே.ஜி.நினைவுநாள். . .

தோழர் .கே. ஜி. அக்டோபர் 1ம் தேதி 1904ம் ஆண்டு பிறந்தார். சிறுவயது முதலே சமூகப்பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பள்ளிஆசிரியராக பணியாற்றினார்.விடுதலைப்போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்த சமயத்தில் தனது பணியை புறக்கணித்துவிட்டு தேசபக்தி இயக்கத்தில் இணைந்தார். விடுதலைக்காக பல சமயங்களில் சிறைவாசம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விடுதலைப் போருடன் இணைந்து சமூகப் போராட்டங் களிலும் .கே. ஜி கலந்து கொண் டார். தலித் மக்கள் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அவர்கேப்டனாகதேர்ந்தெடுக்கப் பட்டார்..முதலில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய .கே.ஜி. தம்மை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்தார். அவரது வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதில் 6 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் சிறைவாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
1941ம் ஆண்டு ஒரு முறை சிறையில் இருந்து தப்பித்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.தேசம் சுதந்திரம் அடைந்த பொழுதுஏ.கே.ஜி. கண்ணூர் சிறையில் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. தேசம் முழுவவதும் விடுதலையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த .கே. ஜி. சிறையில் வாடிக்கொண்டிருந்தார். “கேரளா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் அதன் தலைவராகவும் மற்றும் நீண்ட காலத்திற்கு அகில இந்திய கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த நான் ஆகஸ்டு 15 அன்று சிறையில் இருக்கிறேன்!”எனினும் அவர் விடுதலையை கொண்டாடாமல் இருக்கவில்லை. ஆகஸ்ட் 15ம் நாள் ஒரு தேசியக்கொடியை கையில் எடுத்துக்கொண்டு சிறை வளாகத்தினுள் முழக்கமிட்டபடி நடந்தார். கைதிகளை ஒன்றிணைத்து கூரையின் மீது தேசியக்கொடியை ஏற்றினார். விடுதலையின் பொருள் என்ன என்று கைதிகளிடையே உரையாற்றினார்.
ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றத்தில் புரட்சிகரமாகச் செயல்படுவது எப்படி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் .கே.ஜி. எனில் மிகையாகாது. 1952, 57, 62, 67, 71 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் .கே. ஜி. அவர்கள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.தடம் புரண்ட முதலாளித்துவ கட்சிகளின் பிரதிநிதிகள் ஏராளம்!எனினும் தொழிலாளி வர்க்கக் கட்சியின் பிரதிநிதிகள் இந்த அழிவுப்பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை.இதற்கு இலக்கணம் வகுத்த பெருமை தோழர் .கே. ஜி.யையே சாரும்..1975ல் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து அவர் ஆற்றிய உரை, இல்லை அவரது கர்ஜனை இந்திய நாடாளுமன்றத்தின் மிகச்சிறந்த உரைகளில் ஒன்று! ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவருக்கும் அவசரகால நிலையை எதிர்த்துப் போராட தோழர் .கே.ஜி.யின் உரை மிகுந்த நம்பிக்கையை அளித்தது.
.கே.ஜி.யின் பணி நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் அதிகமாக இருந்தது.அந்தப் போராட்டங்களை ஆள்வோரின் கவனத்திற்கு கொண்டு வரும் ஒரு மேடையாகவே நாடாளுமன்றத்தை .கே.ஜி. பயன் படுத்தினார். பஞ்சாப் விவசாயிகள் போராட்டமா? அங்கு தோழர் .கே. ஜி. இருந்தார். தமிழகத்தில் போராட்டமா? தோழர் .கே.ஜி. பங்கேற்பு இருந்தது. குஜராத் மொழிவாரி மாநிலப் போராட்டமா? அங்கும் தோழர் .கே. ஜி. இருந்தார்.தோழர் .கே.ஜி. இல்லாமல் கேரளாவின் எந்த ஒரு போராட்டமும் நடந்தது இல்லை. ஒரு காலத்தில் தில்லியில்போராட்டம் என்றால் .கே.ஜி; .கே.ஜி.என்றால் போராட்டம்என பேசும் அளவிற்கு அவரது போராட்ட வாழ்வு இருந்தது.இந்தப் போராட்டங்களின் பிரச்சனைகளை விவாதிக்கவே நாடாளுமன்றத்தை .கே.ஜி. பெரும்பாலும் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் போராட்டப் பிரச்ச னைகளை ஒருங்கிணைப்பதில் அவர் மிகத் திறமையாகச் செயல்பட்டார். எனவே தான் புரட்சிகர நாடாளுமன்றப் பணிக்கு இலக்கணம் வகுத்தவர் தோழர் .கே. ஜி.
கேரளாவில் பொதுவுடமை இயக்கத்திற்கு அடித்தளம் இட்டு உரமேற்றி யவர்கள் மூவர். அவர்கள் தோழர்கள் கிருஷ்ணப்பிள்ளை, . எம். எஸ். நம்பூதிரிபாட் மற்றும் தோழர் .கே.ஜி. ஆகியோர் தோழர் .கே.ஜி. மக்களோடு எந்த அளவிற்கு நெருங்கி இருந்தாரோ அந்த அளவிற்கு மார்க்சிய-லெனினியம் மற்றும் சர்வதேசக் கோட்பாடுகளிலும் உறுதியாக இருந்தார். 1977ம் ஆண்டு மறைந்த தோழர் .கே.ஜி. ஒரு செழுமையான பொது வுடமை பாரம்பரியத்தை விட்டுச் சென் றுள்ளார். அந்த பாரம்பரியத்தை கற்பதும் அதனை அமல்படுத்துவதும் ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் மிகுந்த பலன் தரும் என்பதில் அய்யமில்லை! 

No comments: