நாடாளுமன்றத் தேர்தல் - 2014
அரசு மருத்துவமனை வளர்ச்சி... பேருந்து கட்டண உயர்வுக்காக சிறைவாசம் அனுபவித்த
மதுரை வேட்பாளர் பா.விக்ரமன்
மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான பா.விக்ரமன் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 53.கடந்த 1979 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 35 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் அனுப்பானடி கிளைச்செயலாளராக தன் அரசியல் பயணத்தை துவக்கிய பா.விக்ரமன், பின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதிக்குழுச் செயலாளராகவும், பின்னர் மதுரை மாவட்டத்தலைவராகவும், மாநிலத்துணைச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றினார்.1991 ஆம் ஆண்டு பஸ் கட்டண உயர்iவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்து 13 நாட்கள் சிறை வாசம் அனுபவித்த பா.விக்ரமன், 1995 ஆம் ஆண்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் வளர்ச்சி, மதுரையின் தொழில் வளர்ச்சிக்காக வாலிபர் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கெடுத்த போது காவல்துறையால் காட்டு மிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டு 8 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கெடுத்த போது காவல்துறையின் தாக்குதலால் கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். எவர்சில்வர் பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாகபணியாற்றிய பா.விக்ரமன், மதுரை கோட்ஸ் ஆலையில் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை நெசவுத் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு முனிச்சாலை பகுதிக்குழுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1993 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், 1998 ஆம் ஆண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க மையத்தின்(சிஐடியு) மாவட்டத்தலைவராகவும்,
2005 ஆம் ஆண்டு மாவட்டச்செயலாளராகவும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு மாநிலச்செயலாளராகவும்,
2007 ஆம் ஆண்டு அகில இந்திய நிர்வாக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த
1994 ஆம்
ஆண்டு
முதல்
கட்சியின்
முழு
நேர
ஊழியராக
பணியாற்றும்
பா.விக்ரமன், மதுரை மாவட்டத்தில் சிஐடியு ஸ்தாபனத்தை உருவாக்கியதுடன்,
கம்யூனிஸ்ட்
கட்சியின்
இரண்டாம்
தலைமுறை
தலைவராக
மிளிர்ந்த
வி.பாலகிருஷ்ணனின்
மகன்
ஆவார்.
இவருக்கு தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதினராகிய BSNL ஊழியர்கள் நாம், நமது BSNL பொதுத்துறை மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனம்,அணைத்து அரசுத்துறை நிறுவனமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில்,தோழர்.பா.விக்ரமன் போன்ற இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டியது,நமது தலையாய கடமையாகும். அந்த திசைவழி நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment