நெய்வேலி இரண்டாம் சுரங்க வாயிலில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் சுட்டதில் சுரங்க ஒப்பந்தத் தொழிலாளி ராஜா(எ) ராஜ்குமார்மூளைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.இதை தட்டிக் கேட்க அந்த இடத்தில் குவிந்த நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களும் தமிழக போலீசாரும் சரமாரியாக கற்களாலும் தடியாலும் தாக்கினர். கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசி, திரண்டிருந்த மக்களை விரட்டியடித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது. இதில் காயம்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நெய்வேலி முதலாவது சுரங்க விரிவாக்கத் தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி ராஜா(எ) ராஜ்குமார் (35), திங்களன்று 12.30 மணிக்கு தனது அடையாள அட்டையைப் புதுப்பிக்கச் சென்றார். அவரை சுரங்க நுழைவாயிலில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பாதுகாப்பு படை வீரர் தனது துப்பாக்கியை எடுத்து ராஜ்குமாரின் தலையிலேயே மிக அருகில் மூன்று முறை சுட்டார். இதில் ராஜ்குமாரின் மூளை சிதறி அதே இடத்தில் கீழே விழுந்து பலியானார்.இந்த சம்பவத்தை அறிந்த ராஜ்குமாரின் சொந்த ஊரான அஜீஸ் நகரை சேர்ந்த உறவினர்கள், பொதுமக்கள், என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சுரங்க நுழைவாயிலின் முன் ஆவேசத்தோடு திரண்டனர். அவர்களை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் அடாவடியாக அடித்து கடலூர்-விருத் தாசலம் சாலைவரை விரட்டினர்.
பெரும் மோதல் நிலை ஏற்பட்டது. கல்வீச்சில் பலர்காயம்பட்டனர். சிலரது மண்டை உடைந்தது.இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தமிழக காவல்துறையினர் விரைந்து வந்தனர். ராஜ்குமாரின் உடலைச் சுற்றி நின்று நியாயம்கேட்டு கதறிய உறவினர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மீது சரமாரியாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.இந்த கொடுமையை கண்டித்து நமது BSNLEU + TNTCWU மாநில சங்கங்கள் தமிழ் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்தது. அதன் அடிப்படையில் மதுரை GM அலுவலகத்தில் 18.03.14 அன்று மதியம் 1 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டம் BSNLEU + NFTE + TNTCWU சங்கங்கள் சார்பாக சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,தோழர்.கே.முருகேசன்,NFTE மாவட்டத்தலைவர் தலைமை தாங்கினார்.தோழர்.சி .செல்வின் சத்தியராஜ்,BSNLEU மாநில அமைப்பு செயலர்,தோழர்.எஸ்.சிவகுரு நாதன்,NFTE மாவட்ட செயலர்,தோழர்.என்.சோனைமுத்து,TNTCWU மாவட்ட செயலர், தோழர். எஸ்.சூரியன், BSNLEU மாவட்ட செயலர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.TNTCWU மாவட்டத் தலைவர் தோழர்.கே. வீரபத்திரன் எழுச்சி மிகு கோஷங்களை எழுப்பினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 பெண்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment