Sunday 30 March 2014

மதுரை ..தோழர்.பா. விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 29) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.மதுரை மக்களவைத் தொகுதி இடதுசாரி கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன், கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். ஆட்சியரும் தொகுதி தேர்தல் அதிகாரியுமான இல.சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மாற்று வேட்பாளராக, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, லாசர், மாநில செயற்குழு வெங்கட்ராமன், மாநிலக் குழு உறுப்பினர் ஜோதிராம், பொன்னுத்தாய், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் பா.காளிதாஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் க.ஜான்மோசஸ், அருந்தமிழர் விடுதலை இயக்க தென் மண்டலச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, தியாகி பாலு, பி.ராமமூர்த்தி ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். லீலாவதி புகைப்படத்துக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர்,வேட்பாளர்,தோழர். பா.விக்ரமன்செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையில் வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கனரக இயந்திர தடவாளத் தொழிற்சாலைகளை கொண்டு வர மக்களவையில் போராடுவேன்.மதுரையில் இன்னொரு ரயில் முனையம் அமைக்கவும், சிறுதொழில்கள் மற்றும் பொதுத் துறைகளைக் காக்க பாடுபடுவேன்.மதுரை கம்யூனிஸ்ட் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவேன்  என்றார்.   சொத்து விவரம் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன் தனது சொத்து விவரங்களை, வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர் : எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள நான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். குற்றவழக்குகள் ஏதும் இல்லை. என்னிடம் ரூ,3 ஆயிரம், மனைவி ராதாமணியிடம் ரூ. 500 ரொக்கம் கையிருப்பு உள்ளது.  ராமநாதபுரம் சாலையிலுள்ள கனரா வங்கி கிளையில் சேமிப்பு வங்கிக் கணக்கில் ரூ. 768, ஸ்டேட் வங்கியின் விவசாய வளர்ச்சி வங்கியில் சேமிப்பு கணக்கில் ரூ. 25,910, மகள் ஆதிரா பெயரில் ஸ்டேட் வங்கி அண்ணா நகர் கிளையில் ரூ. 1,070, சிட்டி யூனியன் வங்கி எஸ்.எஸ். காலனி கிளையில் ரூ. 443 இருப்புள்ளது.

No comments: