Tuesday, 11 March 2014

உழைப்பாளி மக்களின் அடையாளச் சின்னம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் உருவாக்கப்பட் டுள்ள வெண்மணி நினைவாலயம் கீழ தஞ்சை உழைப்பாளி மக்கள், தமிழக உழைப்பாளி மக்களின் அடையாளச்சின்னமாகும்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல தலித்மக்கள் மீது, விவசாயத் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற வர்க்கச் சுரண்டல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. இதை ஒடுக்க நிலப்பிரபுக்கள் எடுத்த மோசமான நடவடிக்கையால் 44 பேர் எரித்து கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாக இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது.இன்றைக்கு இந்தப் பகுதியில் நமது இயக்கம் வளர்ந்திருக்கிறது. பட்டொளி வீசி செங்கொடி பறக்கிறது. வெண்மணி நினைவாலயம் எழுப்ப உதவி செய்த சிஐடியு, சிபிஐ(எம்), வி.., விதொச., மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் பாராட்டுக்குரியவர்கள்.நினைவாலயம் எழுப்புவதற்கு சிஐடியு எடுத்த முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.தொழிலாளி வர்க்கம் தனது ஆதரவை விவசாய, விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கு தெரிவித்துள்ளது.தொழிலாளிவர்க்கமும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வலுப்பட்டால் தான் இடதுசாரி இயக்கம் வலிமையடையும் என்பதற்கு இந்த நினை வாலயம் ஒரு சான்று என்று பிரகாஷ் காரத் கூறினார்.1930ம் ஆண்டுகளின் இறுதியிலும் 1940 ஆண்டுகளின் துவக்கத்திலும் உழைப்பாளிமக்களுக்காக போராடிய தோழர்கள் சீனிவாசராவ், கே.ஆர்.ஞானசம்பந்தன், பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.செல்லமுத்து, எம்.காத்தமுத்து உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பிரகாஷ்காரத் கம்பீரத்துடன் நினைவு கூர்ந்தார்.
நெஞ்சு நெகிழ்ந்த,தொழிலாளர் வர்க்கத்தின் சங்கமத்தில் நமது மாவட்டத்தில் BSNLEU சார்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 2 ஊர்களிலிருந்து 2 வேன்கள்  மூலம் 40 -க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கு பெற்றோம் என்ற பெருமை கொள்கிறது மதுரை மாவட்ட சங்கம்.
......என்றும் தோழமையுடன்,எஸ். சூரியன் ---D/S-BSNLEU 


No comments: