Friday 31 July 2015

ஜூலை-31,இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்.

மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) 

 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்து
 போரிட்டவர்களுள் ஒருவர்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் 
சிற்றூரில் ஏப்ரல் 17,1756 அன்று பிறந்தவர்அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்தாயார் பெயர் 
பெரியாத்தா  இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று 
கூறபடுகிறதுஇதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

Thursday 30 July 2015

31.07.15 மதுரை BSNLEU மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

அப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள் . . .

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் நேற்று மாலை மேகாலயா ..எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பற்றி சில அரிய தகவல்கள்....

நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு டம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
• 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டவையாகும்.
போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–க்களில் அப்துல் கலாம், ‘‘ லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
அன்னல்  ஒவ்வொரு நொடியும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றார். அவருக்கு என்றுமே இறப்பு என்பதே இல்லை.

Tuesday 28 July 2015

29.07.2015 மதுரை பேரணி 25.08.2015க்கு ஒத்திவைப்பு ...

அவசர - அவசிய அறிவிப்பு 
அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில சங்க அறைகூவலின் படி 29.07.2015 அன்று மதியம் 1 மணிக்கு நடைபெறுவதாக இருந்த மதுரை பேரணி, முன்னாள் குடியரசு தலைவர் A.P.J. கலாம்  அவர்கள்  திடீரென மரணமடைந்து விட்டதால், நாம் நடத்த இருந்த பேரணி  அடுத்த மாதம் அதாவது 25.08.2015க்கு ஒத்திவைத்து நமது தமிழ் மாநில சங்கம் செய்தி அனுப்பி உள்ளது  என்பதை மதுரை மாவட்ட சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.... 
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்.D/S-BSNLEU.

 மாநில சங்க புதிய செய்தி ....
பதவி பெயர் மாற்றம் - தீர்வு காணப்பட்டுள்ளது
நீண்ட நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதவி பெயர் மாற்றம் முடிவுக்கு வந்துள்ளது
இன்று(28.07.2015) நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு கேடர்களின் பெயர்கள் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
1) Regular Mazdoor - Telecom Assistant.
ரெகுலர் மஸ்தூர் - டெலிகாம் அசிஸ்டன்ட் .
2) Telecom Mechanic - Telecom Technician
டெலிகாம் மெக்கானிக் - டெலிகாம் டெக்னிசியன்.
3) TTAs - Junior Engineer.
டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட் - ஜூனியர் இன்ஜினியர்.
4) Sr.TOAs in NE11 & NE12 pay scales - Office Superintendent. 
NE11 மற்றும் NE12 சம்பள விகிதத்தில் உள்ள எழுத்தர்கள் --- ஆபீஸ் சூப்பரின்டெண்ட். 
5) Other Sr.TOAs - Office Associate.
மற்ற எழுத்தர்கள் --- ஆபீஸ் அசொசியேட் 
                                            ---என்றும் தோழமையுடன், ஸ். சூரியன்.D/S-BSNLEU.

ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! (1931 - 2015) - A.P.J.டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார் நமது அஞ்சலி…


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்  நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்ராக்கெட் நாயகனின் வாழ்க்கை பக்கங்கள்..
ஆவுல் பக்கீர் ஜெயுனுல்லாபுதீன் அப்துல் கலாம்! (1931 - 2015)
இதுதான் கலாமின் முழுப் பெயர். அக்டோபர் 15,1931-ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை ஜெயுனுல்லாபுதீன், தாய் ஆஷியம்மா. தந்தையார் படகு கட்டும் தொழில் செய்துவந்தார். கலாம் படிக்கும் காலத்தில் செய்தித்தாள் போட்டும், புளியங்கொட்டை விற்றும் வீட்டுக்கு உதவினார். நேர்மையான பண்பை தன் அப்பாவிடம் இருந்து பெற்றதாகச் சிலாகிப்பார் கலாம். உயர்நிலைக் கல்வியை முடித்த பின், திருச்சியில் ஒரு கல்லூரியில் இயற்பியல் துறையில் பயின்றார். எம்..டி. பொறியியல் கல்லூரியில் ஏரோனாடிக்கல் பொறியியல் துறையில் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் இருந்தபொழுது இவரின் சகோதரிதான் நகைகளைக் கொடுத்து படிக்க அனுப்பினார். கல்லூரி வந்த சில நாட்களிலேயே, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பில் அப்பா, திரும்ப ஊருக்கு வரச்சொல்லியதால் தன் புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பணம் திரட்டப்போன இடத்தில் புத்தகங்களை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்து மேலே படிக்கச் சொன்ன பேப்பர்காரரை இன்னமும் நன்றியோடு குறிப்பிடுவார் கலாம்.
கல்லூரியில் உணவுச் செலவை குறைக்கச் சைவத்துக்கு மாறினார். அதுவே இப்போதும் தொடர்கிறது. பொறியியல் கல்வியை முடித்ததும் விமானி ஆகவே ஆசைப்பட்டார். ஆனால், ஓர் இடம் பின்தங்கி வாய்ப்பை இழந்தார். கண்ணீரோடு நின்றவரை சுவாமி சிவானந்தரின்இதைவிடப் பெரிதான ஒன்றுக்காக நீ அனுப்பப்பட்டு இருக்கிறாய்என்றவரிகள்உத்வேகப்படுத்தின.
விக்ரம் சாராபாயின் ஊக்கத்தில் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்தார். அங்கேதான் முதல் சுதேசி விண்கலமான எஸ்.எல்.வியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ரோகினி, திரிசூல், ப்ரித்வி, ஆகாஷ் என இந்தியாவின் விஞ்ஞான வலிமையை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஏவுகணைகளை உருவாக்கிஇந்தியாவின் ஏவுகணைத் தொழில்நுட்பத் தந்தைஎன அழைக்கப்பட்டார். புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.திருக்குறள், குரான் எப்பொழுதும் உடன் இருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்கள் பிடிக்கும். வீணைவாசிக்கவும்கற்றுக்கொண்டார்.
பிடித்த நிறம் கருநீலம். ஆடைகள் அதே நிறத்தில் இருக்கும். எளிமையான ஆடைகளையே அணிவார். எஸ்.எல்.வி-3 வெற்றிக்குப் பிறகு இந்திரா காந்தி, கலாமைச் சந்திக்க நினைத்தார். அப்பொழுதுஎன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையேஎனக் கலாம் சொல்ல, ”வெற்றி என்கிற அழகான ஆடையை அணிந்து இருக்கிறீர்கள்!’ எனமூத்தவிஞ்ஞானிசதீஷ்தவான்சொன்னார்.
இந்தியா முழுக்க மாணவர்களைச் சந்திப்பதிலும் பாடம் நடத்துவதிலும் தன் நேரத்தை செலவழித்து வந்தார். தன்னிடம் அற்புதமான ஒரு கேள்வி கேட்டதற்காகத் தமிழ்நாட்டு சுட்டி ஒருவரை டெல்லி வரை அழைத்து மரியாதை செய்தார்.
ஜனாதிபதியாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனில் இருக்கும் மொகல் தோட்டத்தை மக்கள் பார்வைக்குத் திறந்துவிட்டார். தன் பதவி ஏற்பு விழாவுக்குச் சுட்டிகளை வரவழைத்தார். பதவிக் காலம் முடிந்து வெளியேறும்போது எந்தப் பரிசுப் பொருளையும் எடுத்து செல்லவில்லை. இரண்டே சூட்கேஸ்களில் அவரின் அத்தனை உடமைகளும் அடங்கிவிட்டன. தன் உறவினர்கள் டெல்லி வந்து தங்கியபோதுது அதற்கான செலவை ஜனாதிபதி மாளிகை கணக்கில் வைக்இந்தியாவின் உயரிய கௌரவமாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது பெற்றவர். ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கிலோ கணக்கில் செயற்கை கால்களை அணிந்துகொண்டு இருந்த சுட்டிகளுக்கு வெறும் நானூறு கிராம் எடையில் செயற்கை கால்களை வடிவமைத்துத் தந்தார்.
தான் எழுதிய அக்னிச் சிறகுகள் நூலில்என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டிவைக்கவில்லை, என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்என்று குறிப்பிட்டு இருக்கிறார்.