Sunday 5 July 2015

தொழிலாளர் மீது போர் தொடுக்கும் மோடி அரசு செப்.2 நாடு தழுவிய வேலைநிறுத்தம்.

அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பு: சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி.,அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் மற்றும் தமிழக தலைவர்கள்அ.சவுந்தரராசன் எம்எல்ஏ., ஜி.சுகுமாறன் ஆகியோர். அறிவிப்பு
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் சக்திகளின் எதிர்பார்ப்புக் கிணங்க தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான சட்ட விதிகளை ஒழித்துக்கட்ட நரேந்திர மோடி அரசு முயல்வதை எதிர்த்து செப்டம்பர் 2 அன்று நடைபெறவுள்ள நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்திற்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவுபெருகுகிறது என்று இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தலைவர்கள் பெருமிதத்துடன் அறிவித்தனர். மத்தியில் ஆட்சி மாறினாலும், தொழிலாளர் விரோத அணுகுமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அனைத்துப் பிரிவு உழைப்பாளி மக்களும் உணரத் தொடங்கி விட்டனர் என்றும் தலைவர்கள் கூறினர்.
 செப்டம்பர் 2 வேலை நிறுத்தப் போராட்டத்தையும், அதற்கான நாடு தழுவிய பிரச்சார இயக்கங்களையும் வெற்றிகரமாக நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.சிஐடியு அகில இந்தியத் தலைவர் .கே. பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன் சென் எம்.பி., ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நாட்டிற்கே எதிரான கொள்கைகள்
மத்திய அரசு மக்கள் மீது திணித்துவரும் கொள்கைகள் தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்கும் மட்டுமல்லாமல், நாட்டிற்கே எதிரானவையாக உள்ளன. தொழிலாளர்கள் மீது ஒரு போர் தொடுக்கப் பட்டிருப்பது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குக் கூடுதல் சுமைகள் ஏற்றப்படுகின்றன. அதன் விளைவாக நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உரங்களுக்கான மானிய வெட்டு நடவடிக்கைகள் மூலம் மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு அடிப் படையான விவசாயத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.`இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்என்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மோடி. இன்னொரு பக்கத்தில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்திகளில் கூட வெளிநாட்டு நிறுவனங் கள் நுழைய அனுமதிக்கப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு தனியார் கூட்டுடன் நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. தமிழகத்தில் நோக்கியா, பாக்ஸ்கான் நிறுவனங்கள் அற்பமான காரணங்களைக் கூறி, லாபத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டன இப்படி நாடு முழுவதும் மூடப்பட்ட தொழிலகங்களைத் திறப்பதற்கு மத்திய அரசும் மாநில அரசும் எதுவும் செய்யவில்லை.
அழிக்கப்படும் பொருளாதார வலிமை
`நல்ல நாள் வருகிறதுஎன்கிறார் மோடி. ஆனால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சொற்பமான கூலியில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது உண்மையில் நாட்டின் பொருளாதார வலிமையை அழித்துவிடும். உலகச்சந்தையில், இந்தியாவின் பேரம்பேசும் வலிமையையும் பலவீனப் படுத்திவிடும்.விவசாயிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்களது நிலங்களைக் கைப்பற்ற நிலச் சட்ட முன்வரைவில் வழி செய்யப்பட்டுள்ளது. 40 சதவீதத்திற்கு மேற்பட்ட விளை நிலங்கள் பறிக்கப்பட்டுவிடும்.இதை தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன.பெண்களின் சம ஊதியம் உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகளும் கைவிடப்படுகின்றன. ஒரு அராஜகமான நடவடிக்கையாக சாலைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
`கோரிக்கை வைப்பதில் பயனில்லை
இப்படிப்பட்ட பல்வேறு நிலைமைகளில், அரசிடம் கோரிக்கை வைப்பதில் பயனில்லை என்ற சூழலில், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்ட வலிமையை எடுத்துக்காட்ட செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தத்திற்கு, தில்லியில் நடைபெற்ற அனைத்துத் தொழிற் சங்கங்களின் மாநாடு அறைகூவல் விடுத்தது.இந்தியாவின் வளங்களை ஏகாதிபத்திய சக்திகள் வளைக்க முயல்கின்றன; அதற்கு மத்திய அரசுபாதை அமைத்துத் தருகிறது. இந்தப்போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாகவும் நடைபெறும். ஹிரோசிமா தினத்தையொட்டி ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சார இயக்கமாகவும் மேற்கொள்ளப்படும். இந்த இயக்கங்களில் 11 மத்திய தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாமல், அவற்றோடு இணைந்திராத பல்வேறு சங்கங்கள், தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி தொழிற்சங்கம், மறுமலர்ச்சி தி.மு.க மத்திய - மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் , பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் போன்றவையும் பங்கேற்கின்றன.

No comments: