கடந்த
2010ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங் களவை உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளமும், பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளை மறுவரையறை செய்வதற்காக பா.ஜ.க. எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் நாடாளுமன்ற குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழு, அரசு ஊழியர்களுக்கான சம்பள கமிஷனின் நெறிமுறைகளின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சுமார் 60 பரிந்துரைகளை கொண்ட ஒரு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ''எம்.பி.க்களின் மாத ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தவும், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தினப்படியான ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி வழங்கவும், ஆண்டுக்கு 20 முதல் 25 விமான பயணங்களை இலவசமாக வழங்கவும், ரயில் பயணத்தின்போது, எம்.பி.க்களின் தனிச்செயலர் போன்றவர்களுக்கும் ஏ.சி. முதல் வகுப்பு டிக்கெட்டை இலவசமாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ வசதியை, அவர்களின் குடும்பத்தினருக்கும், பேரக்குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment