Tuesday, 21 July 2015

20.07.15 மதுரை G.M.அலுவலத்தில் நூதனஅறப் போராட்டம்...

அருமைத் தோழர்களே ! கேபிள் பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஜூன்-2015 மாதத்திற்க்கான சம்பளம் இது தேதிவரை கிடைக்கப் பெறவில்லை, ஒப்பந்த ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை மாதாமாதம் 7-ம் தேதிக்குள் ஒப்பந்ததாரர்கள், ஒவ்வொரு ஊழியரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், சட்டப்படியான EPF/ESI போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டதை ஊழியர்களின் கணக்கில் முறையாக செலுத்த வேண்டும். இவை அனைத்தும் முறையாக நடக்கிறதா ? என்பதை,மாவட்ட நிர்வாகம் "Model Employer"  என்ற அடிப்படையில் கண்காணித்து முறைபடுத்த வேண்டுமென்ற BSNL கார்பரேட் , மாநில நிர்வாகங்களின் உத்தரவு இருந்த போதிலும், சமிபகாலமாக BSNLமதுரை மாவட்ட நிர்வாகம் காண்ட்ராக்ட்காரர்களின் அத்து மீறலை  ஏனோ கண்டு  கொள்வதில்லை. 
இதன் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள் கடுமையான பணிசெய்துவிட்டு சம்பளமின்றி குடும்பம் வாட வேண்டிய அவல நிலை ஒவ்வொரு மாதமும் ஏற்படுகின்றது.  எனவேதான் நமது ஊழியர்களின் உணர்வை வெளிப்படுத்தி நியாம் கோரும் முகத்தான்  20.07.15 அன்று மதியம் 1 மணிக்கு  மதுரை பீபி குளத்தில் உள்ள G.M.அலுவலத்தில் அரைநிர்வாண நூதன அறப் போராட்டத்தை நமது BSNLEU+TNTCWU ஆகிய இரு சங்கங்களும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போராட்டத்திற்கு தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ், K.வீரபத்திரன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர்.இப்போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர்.G.K.வெங்கடேசன் கோரிக்கைகள் அடங்கிய கோஷம் எழுப்பினார். தோழர் .K.தெய்வேந்திரன் D/S-SNEA,  போராட்டத்தை வாழ்த்தி போசினார். தோழர்கள்.S. சூரியன், N. சோணைமுத்து இருவரும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.  தோழர்கள் P.சந்திரசேகர், S.ஜான் போர்ஜியா இருவரும் மாநில சங்கம் சார்பாக வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தோழர். S.மாயாண்டி நன்றி கூற போராட்டம் நிறைவுற்றது.
இப்பிரச்சனையில் உடன் தலையீடு வேண்டி மாநில சங்கத்திற்கும், மதுரை தொழிலாளர் நல அமலாக்க அதிகாரியிடமும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இபோரட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் விரைந்து முடிப்பதாக உறுதி அளித்துள்ளது. பிரச்சனை தீர்வில் மேலும் தாமதமாகும் பட்சத்தில் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் உட்பட செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துள்ளோம்.

No comments: