அருமைத் தோழர்களே! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 25.07.15 அன்று மதுரை CSC/TRC-யில் மாவட்டத் தலைவர் தோழர்.சி. செலவின் சத்தியராஜ் தலைமையில் மிக,மிக எழுச்சியுடன் நடைபெற்றது செயற்குழு கூட்டத்தில் 19 நிர்வாகி களும் பங்கேற்றது, ஓரிரு கிளைச் செயலர்களை தவிர முழுமையான வருகை என்பதோடு பல முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு செயற்குழுவிற்கு சிறப்பு சேர்த்தனர் ....
29.07.15 மதுரையில் நடைபெற உள்ள பேரணி, செப்டம்பர்-2 அகில இந்திய வேலைநிறுத்தம், மாவட்ட செயலரின் மீதான பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக இயக்கம் காண்பது ஆகிய மூன்று ஆய்படுபொருள் மீதான அறிமுகவுரையை மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் நிகழ்த்தினார். அதன் பின் ஆய்படு பொருளின் மீதான விவாதத்தில் 23 தோழர்கள் கலந்துகொண்டு தங்களுடைய ஆழமான கருத்துக்களை பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட செயற்குழு கீழ்க்கண்ட முடிவுகளை ஏகமனதாக எடுத்தது.

- 29.07.15 அன்று மதுரையில் நடைபெற உள்ள பேரணிக்கு குறைந்த பட்சம் 200 பேர்களை திரட்டி சக்தியாக நடத்துவது.
- செப்டம்பர் -2 அன்று நடைபெற உள்ள அகிலஇந்திய வேலை நிறுத்தத்திற்கு விரிவான பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் முகத்தான் கிளைகள் தோறும் கூட்டங்கள் நடத்தி போராட்டத்தை வெற்றிகரமாக்குவது.
- மாவட்ட செயலர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக விரைவில் மாநில சங்க வழிகாட்டுதலோடு இயக்கம் நடத்துவது
- மேற்கண்ட முடிவுகளை, தீர்மானமாக மாவட்ட செயற்குழு ஒருமனதாக முடிவெடுத்தது. 29.07.15 அன்று நடைபெற உள்ள பேரணிக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக 200 போஸ்டர் அடித்து விநியோகிக்கப்பட்டது. மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா நிறைவுரைக்குப்பின் மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் தொகுப்புரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர் எஸ். மாயாண்டி நன்றியுரை வழங்க செயற்குழு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment