மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியின் கட்டணக்கொள்ளையைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர்.மதுரையை அடுத்துள்ள கிடாரிப் பட்டியில் லதா மாதவன் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு சுமார்மூவாயிரம் பேர் படித்து வருகின்றனர். இங்கு தொடர்ந்து கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் பருவத் தேர்வு கட்டணங்களை அதிகமாகவசூலிக்கிறது.பருவத் தேர்வு க்கான கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. மாணவர்கள் தங்களது நலன் சார்ந்த கோரிக்கைகளை எழுப்பினால் அகத்தேர்வு மதிப்பெண்ணை குறைத்துவிடுவோம் என மிரட்டுகிறது. கல்லூரிப்பேருந்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.இதையடுத்து மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று கல்லூரியை முற்றுகை யிட்டனர்.மாணவர்களிடம் கல்லூரி டீன், முதல்வர் மற்றும்காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகளை வெள்ளிக்கிழமைக்குள் நிறைவேற்றித் தருவதாக வாய்மொழியாகக் கூறினர். ஆனால், எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.ஆனால், கல்லூரி நிர்வாகம் சம்மதிக்காமல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிப்பதாகக் கூறி கல்லூரியை மூடிவிட்டது.கல்லூரியின் நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்வரை மாணவர் சங்கம் போராடும். இப்பிரச்சனையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என மாணவர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்...
No comments:
Post a Comment