
இந்த நிலையில், “ஏழைகளுக்காக கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று ஏழை மக்களின் செல்போன்களுக்கே மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேஸ் மானியத்தை ‘விட்டுக் கொடுப்பவர்களுக்கு’ வசதியாக முன் பதிவு செய்யும் போதே மானியத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி யுள்ளன. அதன்படி, கைபேசியிலோ அல்லது தரைவழி போனிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது ஜீரோ பட்டனை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகி விடும்.முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய எண்.1ஐ அழுத்துங்கள் என்றதகவல் முதலில் வரும். அதன்படி வாடிக்கையாளர்களும் சவுகரியமாக எண்.1ஐ அழுத்தி சிலிண்டரை முன்பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது முன்பதிவு செய்யும்போது முதலில், கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க ஜீரோவை அழுத்தவும் என்று வருகிறது. அதன் பிறகுதான் சிலிண்டர் முன்பதிவுக்கு எண்.1ஐ அழுத்தவும் என்று வருகிறது.இந்த நடைமுறையைப் பற்றி தெரியாதவர்கள் மற்றும் போன் பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.ஜீரோவை தவறுதலாக அழுத்திய பிறகு அதை திருத்திக் கொள்ள போனில் வாய்ப்பு இல்லை. பின்னர்மீண்டும் மானியத்தை பெற வேண்டும் என்றால் கேஸ் ஏஜென்சி யைத்தான் அணுக வேண்டும். இந்த நடைமுறையால் கேஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நடைமுறை சிக்கல்களை சந்திக்கஅதிக வாய்ப்பு உள்ளது. எனவேசிலிண்டர் முன்பதிவு செய்யும் போது மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேஸ் மானியத்தை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது என மோடி அரசு தீர்மானித்துவிட்டது. அதையே படிப்படியாக அமலாக்கி வருகிறதுஎன்பதை இது உறுதிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment