மகளிருக்கான உலக ஹாக்கி லீக் தொடரில் 5வது இடத்துக்கான போட்டி இன்று நடந்தது. இதில், இந்திய அணியும், ஜப்பான் அணியும் மோதின. இந்த விளையாட்டின் முடிவில் ஜப்பான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோற்கடித்தது. இதையடுத்து, 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. இதற்கு முன் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாடியது. தற்போது இந்திய மகளிர் அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளதையடுத்து, அடுத்த ஆண்டு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறும் ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி விளையாடும்.நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
No comments:
Post a Comment