Wednesday 1 July 2015

தனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்

ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் மதுரை ரெயில் நிலையம் முன் ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
மத்தியில் பா... அரசு பொறுப்பேற்ற பிறகு ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய பிபேக் தோப்ராய் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரையை கண்டித்து நாடு முழுவதும் ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக ரெயில்வே ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.இந்தநிலையில், மதுரை ரெயில்நிலையம் முன்பு கருப்புச்சட்டை அணிந்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரை கோட்ட செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார். கோட்டத் தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத் தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பாதுகாப்பு கேள்விக்குறி
பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வரும் ரெயில்வே துறையை தனியார்மயமாக்க பிபேக் தோபராய் தலைமையில் பா... அரசு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி பரிந்துரையின்படி, 10 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதுஅடுத்த 3 வருடங்களில் 2 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். அவர்களின் பணியிடங்கள் சரண்டர் செய்யப்படும். ஏற்கனவே காலியாக உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு நிறைந்த தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பணியிடங்களில் தனியாரை நியமித்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். எனவே பிபேக் தோபராய் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
வேலைநிறுத்தம்
இந்த கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் வருகிற நவம்பர் மாதம் 23-ந் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்தப்படும். இதில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் கலந்து கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்காக பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் ஊழியர்கள் நேற்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்இதனால் மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் நேற்று பகல் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 

No comments: