Saturday, 18 July 2015

நடக்காத நிகழ்ச்சிக்கு வீணடிக்கப்பட்ட ரூ.17 கோடி-மோடியின் கழிப்பறைகளுக்குக் கூட ஏ.சி.

பிரதமர் நரேந்திர மோடியால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட வாரணாசி நிகழ்ச்சிக்கு, 17 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக் கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திரமோடி, வெளிநாட்டு பயணங்களிலேயே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர், சொந்தத் தொகுதியான வாரணாசியைக் கண்டுகொள்ளவில்லை என்று விமர்சன ங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது 8 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பிய மோடி, ஜூலை 16-ஆம் தேதி வாரணாசி நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தது.இதற்காக கடந்த பல வார காலமாகவே, வாரணாசியில் மிக பிரம்மாண்ட மான மேடை அமைக்கும் பணிகளும், அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தனமோடி பயன்படுத்துவதற்காக 3 குளிரூட்டப் பட்ட கழிப்பறைகள் மேடைக்கு அருகிலேயே அமைக் கப்பட்டிருந்தன. அத்துடன் வாரணாசியில் நிலவும் தட்ப வெட்ப மாற்றத்தை சமாளிக்க, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் சுமார் 100டன் அளவுடைய குளிர்சாதன வசதி செய்யப் பட்டிருந்தது. 100 கூலர்ஸ் & 2000 மின் விசிறிகளும் அமைக்கப் பட்டிருந்தன. இதற்காக 10 அதி நவீன ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. மோடி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதி நவீன ஜெனரேட்டர்கள் மூலம் மட்டும் 1000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதுஇது தவிர மோடியின் பேச்சை சுமார் 20 ஆயிரம்பேர் நேரடியாக பார்க்கும் வகையில், 15 அதிநவீன L.E.Dஒளித் திரைகளும் அமைக்கப் பட்டிருந்தனமோடியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் பயணம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டும் சுமார் கோடி ரூபாய்  செலவிடப்பட்டு  இருந்தது.  இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்,கடைசி நேரத்தில், மழையைக் காரணம் காட்டி ஒருநொடியில் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.மோடி கலந்து கொள்ளாத இந்த நிகழ்ச்சிக்கு செலவிடப் பட்ட பணம் மட்டும் 17 கோடி ரூபாய். அத்தனையும் வீண். மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் செலவு ரூ. 17 கோடிஎன்றால், இதுதான் அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் லட்சணமா? என்ற கேள்வி எழுகிறது.

No comments: