Monday 13 July 2015

விம்பிள்டன் டென்னிஸ் - வென்று சானியா சாதனை ...

சானியா: கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் எனது இந்த வெற்றி பல பெண்களை டென்னிஸ் நோக்கி கவர்ந்து இழுக்கும் என நம்புகிறேன் வெற்றிக்கோப்பையுடன்மார்ட்டினா-சானியா ஜோடி
இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா படைத்துள்ளார்.முன்னதாக, அரை இறுதியில் அமெரிக்க இணைகளான ரகுவெல் கோப்ஸ்- ஜோன்ஸ்- அபிகெய்ல் ஸ்பியர்ஸ் இணையை இந்த இணை எதிர்கொண்டது. அதில் 6-2, 6-2 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டு செட்களிலும் சானியா - ஹிங்கிஸ் இணைக்கு அமெரிக்க இணையால் ஈடுகொடுக்க முடியவில்லை.இதனால் சானியா - ஹிங்கிஸ் இணை எளிதில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.இறுதிப் போட்டில் சானியா - ஹிங்கிஸ் இணையும், ரஷ்யாவின் இகன்ட்ரினா மகரோவா, இலினா வெஸ்னியா இணையும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5--7, 7 -6 (4), 7--5 என்ற செட் கணக்கில் ரஷ்ய இணையை வீழ்த்தி, சானியா - ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் முதன்முறையாக மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம்பெற்று, வெற்றிக் கோப்பையை கைப்பற் றிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா படைத்துள்ளார். இதனால் பல்வேறு தரப்பில் இருந்து இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சானியா மிர்சா பேட்டி
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சானியா மிர்சா, “ டென்னிஸ்பேட்டை கையில் எடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் கனவும் விம்பிள்டன் பட்டம் வெல்வதுதான். இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த ஆதரவு ஆச்சரியமாக இருந்தது.மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் நிலவிய உற்சாகத்தையும், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியதையும் பார்த்த போது இதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம், விளையாடுகிறோம் எனத் தோன்றியது. நான் விளையாடிய டென்னிஸ் போட்டிகளில் சிறந்த ஆட்டம் இதுவாகும். விம்பிள்டன் என்பதால் 3–வது செட்டில் நாங்கள் 2–5 என்ற சுற்றில் பின்தங்கி இருந்தோம். அதில் இருந்து கடினமாக போராடி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறதுஎன்றார்.

No comments: