இத்தாலியில் இடதுசாரி அரசைக் கவிழ்க்க நாடாளுமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட் டிருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு ரோமானோ ப்ரோலி தலைமையிலான இடது நடுநிலை அரசு ஆட்சியில் இருந்தது. இந்த அரசைக் கவிழ்க்கும் நோக்கில் செர்ஜி டி ஜியார்ஜியா என்ற அமைச்சருக்கு 33 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்ததாக முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மீது குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்று ரோமானோ பரோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது.இதைத்தொடர்ந்து இடது நடுநிலை ஆட்சியை கலைக்கும் நோக்கில் 2 முறை பிரதமராக இருந்த பெர்லுஸ்கோனி இடதுசாரி நடுநிலை அரசை கவிழ்க்க செரிஜி டி ஜியார் ஜியா என்ற அமைச்சருக்கு 33 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜியார்ஜியா கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றார்.இந்நிலையில் 2 ஆண்டுகளில் ரோமானோ தலைமையிலான அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதனால் கடந்த 2008ம் ஆண்டு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பெர்லுஸ்கோனி வெற்றி பெற்று 3 வது முறையாக பிரதமரானார்.
ஆனால் 2011 ம் ஆண்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் பாலியல் புகாரும் எழுந்ததைத்தொடர்ந்து பெர்லுஸ்கோனி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பல வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேப்பிள்ஸ் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணையின் போது பெர்லுஸ்கோனியிடம் இருந்து லஞ்சம் வாங்கியதை ஜியார்ஜியா ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
1 comment:
இத்தாலியில் நீதிபதி "நிதிபதியாக" இல்லாமல் "உண்மையான நீதிபதியாக" தனது கடமையைச் செய்துள்ளார். கல்லுளி மங்கணிடமும் உண்மையை வரவழைக்கும் வித்தையை எங்கு கற்றாரோ இத்தாலி நீதிபதி.
இந்தியாவில் இதுவும் ஒருநாள் சாத்தியமே.... நீதி விலைக்கு !? விற்கப்படாமல் வாங்கப்படாமல் !? இருக்குமானால்!?
தோழமையுடன்...
இராமசாமி அய்யனார்சாமி
திண்டுக்கல்
Post a Comment