Wednesday, 15 July 2015

வியாபம் ஊழல் - இதுவரை நடந்தது என்ன?

1982ம் ஆண்டு வியவசாயிக் பரீக்சா மண்டல் (வியாபம்) அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே இது நடத்தியது.2008ம் ஆண்டில் அரசு ஊழியர்களை தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை நடத்தும் பொறுப்பும் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது.2009 ஜூலை 5 அன்று வியாபம் நபர்களை தேர்வு செய்ததில் விரிவான அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.2009ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்தது. இது தொடர்பாக முதல் புகார் பதிவு செய்யப்பட்டது.2009 டிசம்பரில் இந்த ஊழலை விசாரிப் பதற்காக முதல்வர் ஒரு குழுவை நியமித்தார்.2013 ஜூலை 7 அன்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 20 பேரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக கைது செய்தனர். 2013 ஜூலை 16 அன்று இந்த ஊழலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டார். 2013 ஆகஸ்ட் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை விசாரணையை எடுத்துக்கொண்டது. 55 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.2013 அக்டோபர் 9 அன்று தேர்வு எழுதிய 345 பேரின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன.2013 டிசம்பர் 18 அன்று உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா (பாஜக) வழக்கில் பதிவு செய்யப்பட்டார்.2014 நவம்பர் 5 அன்று .பி., உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவை சிறப்பு அதிரடிப்படையின் விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக நியமித்தது.2015 ஜூன் 29 அன்று சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட 23 பேர்இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாதாரணமான காரணங்களால்’’ மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று கூறினர்.2015 ஜூலை 7 அன்று முதல்வர் சவுகான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
இவ்வூழலில் இதுவரை--
140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 3800 பேர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்; 800 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்; 2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; 68 தேர்வுகளை வியாபம் நடத்தி இருக்கிறது; 1,087 மாணவர்களுடைய அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது; 76 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் இந்த ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 1 கோடியே 40 லட்சம் பேர் வியாபம் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் ; ‘வியாபம்மூலம் வேலைக்குச் சேர்ந்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்..

No comments: